பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 261 பளித்த கவிஞன் இராமனின் எதிரே அனுமனை நிறுத்தி ஒரு நாடகமே நடத்திக் காட்டுகிறான். சோதரர் இருவரும் நெருங்கி வந்தவுடன், அனுமன் எதிர் சென்று வணங்கினும் வரவு நல்குவராகுக என்று கூறாமல், நும் வரவு துன்பம் இல்லாமல் அமைவதாக என்ற கருத்தில், கவ்வை இன்றாக நுங்கள் வரவு' என்று கூறுகின்றான். இதனை அடுத்து இராமன் நீ யார்? என்ற ஒரு வினாவைக் கேட்டலும், அனுமன் இரண்டு பாடல்களில், விடை கூறுகிறான். - . மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம் நஞ்சு எனத் தகையவாகி நளிர்இரும் பனிக்குத் தேம்பாக் கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய - கண்ண! யான் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றின் வந்தேன் நாமமும் அனுமன். என்பேன். இம்மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன் செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி விம்மல் உற்று அணையான் ஏவ வினவிய வந்தேன் என்றான்; (அனுமப் படலம்-15.16) மேகம் திரண்டது போன்ற அழகிய உடம்பை உடை யாய்! மகளிர் கண்டால் தம் மனத்தைப் பேதலிக்கச் செய்யும் நஞ்சு என்று கூறும் அழகுடைய, பனியால் வாடிக் கூம்பாத, தாமரை போன்ற கண்ணை உடையாய்! யான் காற்றின் வேந்தனுக்கு அஞ்சனை வயிற்றில் பிறந்தேன் அனுமன் என்பது பெயர். இந்த மலையில் வாழும் சூரியன் மகனார் சுக்ரீவனுக்குப் பணி செய்கின்றேன். தேவ! உம்முடைய