பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 + கம்பன் - புதிய பார்வை வரவைக் கண்டு ஆனந்தத்தில் மூழ்கியுள்ள அவன் ஏவலி னால், உம்மைக் கண்டு யார் என்று அறியவேண்டி வந்தேன்.) இதுவா சொற் செல்வம்? அனுமன் கூறிய விடையாக அமைத்த சொற்கள் கம்பனில் இவ்வளவுதான். வான்மீகத்தில் அனுமன் மிக நீண்ட சொற்களால் மிக நீண்ட உபசாரம் கூறுகிறான். மூல நூலில் மூன்று பக்கங்களில் மேல் உள்ள அனுமன் சொற்களை ஒன்றரைப் பாடலில் முடித்து விடுகிறான் கம்பன். இப்பாடல்களில் அனுமன் கூறிய விடை அவன் இடத்தில் வேறு யார் இருந்திருப்பினும் கூறக்கூடியவை தான். எனவே இந்தச் சொற்களை மட்டும் வைத்துக் கொண்டு அனுமனைக் கல்விமான் என்றோ, பேர் அறிவாளி என்றோ கூறிவிட முடியாது. ஆனால், அனுமன் கூறிய இந்தச் சொற்களைக் கேட்டுவிட்டு, இராமன் இலக்குவனிடம் பேசும் செய்திகள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. மாற்றம் அஃது உரைத்தலோடும்,' வரிசிலைக் குரிசில் மைந்தன், தேற்றம் உற்று, இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி, ஆற்றலும், நிறைவும்; கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லை யாம்' என விளம்ப லுற்றான் (அனுமப் படலம் -17) |மாருதி கூறிய சொற்களைக் கேட்டுத் தசரதன் மைந்தன் ஆற்றல், நிறைவு, கல்வியால் விளைந்த அமைதி என்பவை வேறுபாடில்லாமல் இவன்பால் நிறைந்துள்ளன என்பது தேர்ந்து இவனைவிடச் செம்மையுடையார் இவ்வுலகத்தில் இல்லை என்ற முடிவுக்கு வந்து பேசத் தொடங்கினான்.)