பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 263 துரத்தில் இருவரையும் கண்ட மாத்திரத்தில் அனுமன், எவ்வாறு அவர்கள் யார், என்பதை அறிந்து எடை போட்டானோ, அதேபோல அனுமன் பேசிய இந்தச் சாதாரணமான சொற்களை வைத்துக்கொண்டு, இராமன் அனுமனை எடைபோட்டுவிடுகிறான். இவர்கள் இருவரும் புலனடக்கத்தாலும், அதனை அடுத்து வருகின்ற பண்பாட்டாலும் ஒத்துப் போதலின் ஒருவரை ஒருவர் எடைபோட முடிந்தது என்று கருதுவது ஒரு வகையில் சரியானதேயாகும். இராமனைப் பொறுத்தவரை அனுமன் கூறிய விடையில் உள்ள சொற்களைக் காட்டிலும், அவனுடைய நிற்கும் நிலை, ஆளுமை (Personality) என்பவற்றுடன் அனுமன் கண்கள் மூலமாக அவனுடைய அகத்தை அறிகிறான் என்பதே நேரிதாகும். அனுமனும், இராமனுடைய உடலழகில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. ஏனையோரைப் பொறுத்தவரை "தோள் கண்டார் தோளே கண்டார்; தாள் கண்டார் தாளே கண்டார்; தடக்கை கண்டாரும் அஃதே!" (உலாவியல் படலம்-79 எனவே யாரும் வடிவினை முடியக் காண்கிலர் என்பது சரி. ஆனால் ஆஜானுபாகுவான இராமனின் வடிவழகில் ஈடுபடாமல், அவனுடைய கண்களை மட்டுமே அனுமன் கண்டான் என்பது அவன் சொற்களிலிருந்தே தெரிகிறது. மகளிர்க்கு நஞ்சு போன்று உள்ளன இராகவன் கண்கள் என்ற அடிக்கு, பழைய முறையில், இவன் கண்களைக் கண்ட மகளிர் அவன்பால் ஈடுபட்டுத் துயர் அடைகின் றனர் என்று பொருள் கூறுவர். அது சரியாகப் படவில்லை. மகளிர்க்கு நஞ்சு-ஏன்? ஆனால் புலனடக்கத்தின் உச்சியில் நிற்கின்ற அனுமன் அந்தப்பொருளில் கூறியதாக நினைப்பதற்கில்லை. பிராட்டியைத் தவிர, ஏனையோர்க்கு அக் கண்கள் கமலமாகவே காட்சி அளிக்கும். ஆனால், வேறு எண்ணத்