பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் r 9 அரசனை 'இறை என்ற சொல்லால குறிப்பதும், அவன் உறையும் இடத்தைக் கோயில் என்று அந் நாட்களில் குறித்ததும் அரசர்களைத் திருமாலின் அவதாரமென்று கருதும் கொள்கை சங்க காலத்திலிருந்தே வருகிறது என்று துணிய உதவுகின்றன. சங்க காலத்தை அடுத்துள்ள காலத்திலும், இக் கொள்கை வலுப்பெற்றது என்றே கருத வேண்டியுள்ளது. இரு நிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கிடை (பெரும்பாண் 29-30) (வாமனாவதாரத்தில் பெரிய பூமியை ஒரடியால் அளந்து கடந்தவனும், திருவாகிய மறுவை மார்பில் உடையவனும், கடல்நிற வண்ணமுடையவனுமாகிய திருமாலின் வழித்தோன்றல் (பிறங்கிடை-வழித்தோன்றல்) என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் பேசுகிறார். அதாவது சோழ மன்னனை திருமால் குடியில் தோன்றியவன் என்று கூறுகிறார். 'திருமால் குடியில் தோன்றிய உரவோன்’ என்று பாடல் கூறுவதற்கு விளக்கமாக டாக்டர் உ.வே.சா. ஐயரவர்கள், திருமால் என்றது இராமபிரானை' என்று எழுதுகிறார்.) சோழ மன்னனைத் திருமால் என்று கூறும் இச் சங்ககாலக் கொள்கை தொடர்ந்து வந்துள்ளது. தொல் காப்பியம் புறத்தினை இயலில், புறத்திணை வழு ஏழைக் கூறும் 5ஆவது சூத்திரத்தில் "மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில் தாவா விமுப்புகழ் பூவை நிலை. என்ற பகுதிக்கு உரையிட்ட நச்சினார்க்கினியர். மாய வனுடைய காத்தல் புகழை மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவை நிலை என்று கூறிவிட்டு,