பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 கம்பன் - புதிய பார்வை துடன் இராமன் கண்களை மகளிர் பார்ப்பார்களே யானால் அவர்களுடைய அந்தக் காம இச்சைக்கு நஞ்சாகி, அக் காமத்தை அழித்து, அவர்களை நல்வழிப்படுத்தும் என்ற கருத்தில் அனுமன் கூறியதாகவே கொள்ளுதல் நேரிது. மேலும் பனிக்குத் தேம்பாக் கஞ்சம்!” என்று கூறியதை இலக்கண அடிப்படையில் வெளிப்படை எனக் கொண்டு, கமலம் போன்ற கண் என்று பொருள் கூறுவதும் சிறப்பாக இல்லை. தாமரைக்கு ஊறு விளைப்பது பனி. பனி வந்தால் தாமரை கூம்பிவிடும். ஆனால் தாமரைக்கு ஊறு விளைக்கும் பனியைப் போல, இராகவனுக்கு இடுக்கண் விளைக்கும் துன்பம் வந்தாலும் அவனுடைய கண்கள் அத்துயரத்தால் வாடுவதில்லை என்பதையும்; அனுமன் கூறுகிறான். பெறுதற்கரிய ஒன்றை இழந்துவிட்டுத் தேடிக்கொண்டு வருகிறார்கள் என்று நினைத்தவன் அவன்தானே? பக்கத்தில் நின்று இராகவன் கண்களைப் பார்த்த பிறகு எத்தகைய துன்பத்திலும் மனம் ஒடியாத சமநோக்கம் (சமதிருஷ்டி) உடையவன் இராமன் - என்பதையும், அனுமன் கண்டுவிட்டான். எனவே புலனடக்கத்தில் தலை நின்றவன் இராமன் என்பதைக் கண்டுகொண்ட அனுமன், தான் கண்டுகொண்டதை மிக அற்புதமாக இராமனை விளிக்கின்ற சொற்களின் மூலமாகவே வெளிப்படுத்தி விட்டான். மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது இராமனின் அழகில் ஈடுபட்டு இவ்வாறு விளித்தான் என்று பொருள் கூற முடியும். ஆழ்ந்து நோக்கினால் அனுமனின் ஆற்றலை அறிய இச் சொற்கள் வாய்ப்பளிக்கின்றன. இராமனுடைய கண்களைப் பார்த்த மாத்திரத்தில் அவன் ஸ்திதப் பிரக்ஞன் என்பதையும் புலனடக்கத்தில் தலை நின்றவன் என்பதையும், ஏகபத்தினி விரதன் என்பதையும், துன்பம், துயரம் என்பவற்றால் கலங்காத உறுதி படைத்த மதிருஷ்டி உடையவன் என்பதையும் கண்டு, அதனை