பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

છો. . ஞானசம்பந்தன் + 265 இரண்டே வரிகளில், அதுவும் கண்களைக் கூறும் முறையிலேயே வெளிப்படுத்தி விட்டான் என்றால், அனுமனை இராமன் இச்சொற்களின் மூலம் எடைபோட்டது சரியே! - இராமன் கண்ட அனுமன் இராகவனும் அனுமன் சொற்களின் முற்பகுதியைக் கேட்ட மாத்திரத்தில், அவனிடம் ஆற்றல், நிறைவு, கல்வி, அமைதி, அறிவு என்பவை நிறைந்துள்ளன என்பதையும், அவனும் புலனடக்கத்தில் தேர்ந்தவன் என்பதையும், பரதனைப் போலச் செம்மையின் ஆணியாவன் என்பதையும், தன் மனத்துள் விளங்கிக் கொண்டான் என்றும் கவிஞன் கூறுகிறான். இதுவரை உள்ளவை இராமன் மனத்துள் எண்ணிய எண்ண ஓட்டமும், அவன் கண்ட முடிவுமாகும். இதனை அடுத்து, இராகவன் தன் பக்கத்தில் நிற்கின்ற இளைய பெருமாளைப் பார்க்கின்றான். எதிரே நிற்கும் பிரம்மச்சாரி, இளையவன் மனத்தில் எத்தகைய உணர்ச்சிகளை உண்டாக்கினான் என்று அறிய ஆவல் கொண்டான் போலும்! ஆனால், இளையவனிடத்தில் எவ்வித மாறுதலும் காணப்படவில்லை. எனவே, இராகவன் பேசத் தொடங்குகிறான். வில்லைத் தோளில் தாங்கி நிற்கும் இளைய வீரனே! தன் புகழ் உலகம் முழுவதும் பரவும்படியாக, இவன் கல்லாத கலையோ, வேதமோ இல்லை என்பதை இவன் சொற்கள் அறிவிக் கின்றனவே! இச்சொல்லின் செல்வன் யாராக இருக்க முடியும்? நான்முகனோ? சிவபிரானோ? என்ற பொருளில், இல்லாத உலகத்து எங்கும், இங்கு இவன் இசைகள் கூறக் கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி