பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 கம்பன் - புதிய பார்வை சொல்லாலே தோன்றிற்று அன்றே? யார்கொல் இச் சொல்லின் செல்வன்? வில் ஆர்தோள் இளையவிர! விரிஞ்சனோ? விடைவ லானோ? (அனுமப் படலம்-18) என்று விளக்குகிறான். 'வில்ஆர் தோள் வீர! இப்பாடலில் இளையவனை விளிக்கும் இராகவன் 'வில்ஆர் தோள் இளையவிர!” என்று கூறுவது கருத்துடை அடைமொழி என்று கூறப்பெறும் அறிவைப் பயன்படுத்தி எதிரே நிற்பவன் யார்? எத்தகையவன்? இவன் நமக்குப் பயன்படுவான்ா? என்றெல்லாம் சிந்திக்காமல் இளை யவன் நிற்பதால்-வில்லை ஏந்தி இருப்பது மட்டும் போதாது; அத்தோளின் மேலே உள்ள முனையையும் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பாகப் பேசுகிறான்' என்று நினைய வேண்டியுளது. இந்த விளிச்சொற்களுக்கு இவ்வாறு குறிப்புப் பொருள் (Suggestion) உண்டு என்று கருத இடந்தருவது அடுத்த பாடலாகும். இவ்வளவு தூரம், இராகவன் கூறிய பிறகாவது இளையவன் சிந்தித்திருக்க வேண்டும்; சாதாரணமாக 'இன்னார் மகன் நான் என்று விடை கூறியவனைச் சொல்லின் செல்வன் என்று அண்ணன் கூறுகிறானே! இதில் ஏதோ கருத்து இருக்க வேண்டுமே என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். அவ்வாறு நினைத்திருந்தால், வார்த்தைகளை அளந்து பேசும் இராகவன் இவ்வாறு கூற வேண்டுமானால் அதற்குள் ஏதோ ஒரு கருத்து அடங்கி இருத்தல் வேண்டும் என்ற உண்மை புலப்பட்டிருக்கும். இவ்வளவு கூறியும் இளையவன் அறிவிற்கு ஒன்றும் புலப்படவில்லை யாதலால், இராகவன் அவனை இடித்துக் கூறத் தொடங்கினான். -