பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 267 தம்பிக்கு இடித்துக் கூறுகிறான் வெறும் பிரம்மச்சாரி என்று அவன் புறத்தோற்றத்தை மட்டுங் கொண்டு நீ முடிவு செய்துவிடாதே! மகனே! இவ் உலகுக்குக் கடையாணி போன்ற ஆற்றலுடையவன் இவன். இவனுடைய ஒப்பற்றதும், நாளும் வளர்வதுமான பெருமையை ஐயத்திற்கு இடன் இன்றி ஆராய்ந்து தெளிந்துவிட்டேன். என் சொற்கள் எவ்வளவு மெய்ம்மை ஆனவை என்பதை நீ பின்னர்க் காணலாம் என்று இடித்துக் கூறினான், என்ற பொருளில், மாணியாம் படிவம் அன்று, மற்று இவன்வடிவம்! மைந்த! ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம், ஆற்றற்கு ஏற்ற சேண் உயர் பெருமைதன்னைச் சிக்கு அறத் தெளிந்தேன். பின்னர்க் காணுதி மெய்ம்மை என்று தம்பிக்குக் கழறிக் கண்ணன், - - (அனுமப்படலம்-19) கூறுகிறான். இந்த உரையாடல் நடைபெற்ற சில விநாடிகளில் எதிரே உள்ளவன் இந்த உலகங்கட்கு எல்லாம் ஆணி என்று கூறத்தகுந்த ஆற்றல் படைத்தவன் என்பதை இராமன் கண்டுவிட்டானாம். அது மட்டுமன்று ஏதோ உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு கூறினதாகத் தம்பி நினைந்து விடக்கூடாது என்பதற்காக, மைந்த என்று அழைத்து, சிக்கு அறத் தெளிந்தேன் என்று தமையன் கூறுகிறான். தன் இளவல் இவ்வளவு கூறியும் இன்னும் சிந்திக்கத் தொடங்கவில்லையே என்று வருந்தியதால் 'இளையவிர!” என்று பாட்டில் விளித்த இராகவன், இப்பாடலில் உரிமை பாராட்டித் தந்தையின் இடத்தில் - இருந்து மைந்தனைத் திருத்துபவன் போலப் பேசத் தொடங்கி, ஆழ்ந்து சிந்தித்துத்தான் இம்முடிவுக்கு