பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 - கம்பன் - புதிய பார்வை வந்தேன்’ என்று கூறியும், விழிப்புணர்ச்சி ஏற்படாத தம்பியை நோக்கி, இடித்துக் கூறினான் என்று பேசுகிறான் கவிஞன். கழறுதல் என்ற சொல்லுக்கு இடித்துக் கூறுதல் என்பது பொருளாகும். . . கல்வி மட்டும் போதாது இந்த மூன்று பாடல்களிலிருந்து ஒர் உண்மையைப் புலப்படுத்த விரும்புகிறான் கவிஞன். ஒரு சிலரை, ஒரு சிலரே அறிய முடியும். ஒரு சிலர் பார்த்த மாத்திரத் திலேயே எதிரே இருப்பவரை உள்ளவாறு அறிய முடியும். இன்னுஞ் சிலர் ஒரளவு பழகிய பின்னர் அறிய முடியும். இன்னும் சிலருக்குப் பட்டால்தான் புத்தி வருகிறது. இராமனை அறிந்தவர்களுள் தலையாய இடத்தில் இருப்பவன் அனுமன், வெறும் கல்வி கேள்விகளாலோ, அன்றித் தவத்தாலோ, அவன் இராமனை இன்னான் என்று அறிந்துகொண்டான் என்று கருதுவது தவறாக முடியும். கல்வி, கேள்விகளால் அன்றித் தவத்தால் மட்டும் பரம்பொருளை அறிய முடியும் என்றால், வாலியும், இராவணனும், ஏன் இரணியனுங் கூடத் தொடக்கத் திலேயே அறிந்திருக்க வேண்டும். சத்திய தரிசனத்துக்குக் கல்வி எவ்வளவு தூரம் உதவுகிறது என்பதே ஆராய்ச்சிக் குரியது ஆகும். கல்வி பல சமயங்களில் உண்மையைக் காட்டுவதற்குப் பதிலாகத் தன்னைப் பெற்றவனின் மண்டையை வீங்கவைத்து விடுகிறது. எனவேதான் மணிவாசகர் போன்ற பெரியவர்கள், கற்றாரை யான் வேண்டேன்; - கற்பனவும் இனி அமையும் - . - (திருப்புலம்பல்-3) என்றும், தாயுமானவப் பெருந்தகை கல்லாத பேர்களே நல்லவர்கள் (சித்தர்-10)