பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 269 என்றும் பாடிச் சென்றனர். கல்வியில் உள்ள இந்தக் குறை, கல்வியில் இல்லை; அதனைப் பெற்றவனிடம் உள்ள குறைதான் ஆகும் என்றாலும், இந்தக் குறை கற்றவர் களிடமும் உள்ளது என்பதை மறுத்தற்கில்லை. இதனையே வடநூலார் வித்யா கர்வம் என்று கூறுவர். எனவே, அனுமனிடத்தில் அனைத்துக் கலைகளும் நிரம்பியிருந்தன என்று மட்டும் கூறுவதால் பயனில்லை. கல்வி நிறைந்தவனாக இருந்தான் என்று கூற வரும்பொழுதே, இராகவன் கல்வி அமைதியும் என்று கூறுவதன் உட்கருத்து இதுவே ஆகும். உண்மைக் கல்வி நிரம்ப, நிரம்ப அமைதியைத் தர வேண்டும். அனுமனைப் பொறுத்த மட்டில், அவன் அந்த அமைதியைப் பெற்றிருந்தான் என் கிறான் இராகவன். அப்படியானால், இராமனை, அனுமன் தன் கல்வியறிவால் காணவில்லை என்பது நிறுவப்பட்டால், வேறு எதனால் என்ற வினா எழுமன்றோ? அதற்கு விடை நேரிடையாகக் கூறப்படவில்லை, அவன் சொல்லாலே தோன்றிற்று என்று இராகவன் கூறுவதைச் சிந்திக்க வேண்டும். சொல்லாலே என்ன தோன்றிற்று? அனுமன் தான் யார் என்பதையும், யாரிடம் பணிபுரிகிறான் என்பதையும், கூறினதை வைத்துக்கொண்டு சொல்லின் செல்வன்' என்பதற்கு இதுவரை, பொருள் கூறினவர் பலராவர். யார் என்ற ஒரே வினாவிற்கு இத்தனை விடையையும் கூறினதே சொற்செல்வம் என்று பொருள் கூறினர். இவ்வாறு இவர்கள் பொருள் கூற வழிகாட்டியது சிலப்பதிகாரமாகும். 'யார் நீ என்ற பாண்டியன் வினாவிற்கு, அவன் அடுத்த வினாக் கேட்க இடமில்லா மல் கண்ணகி விடை இறுத்ததைச் சொற்செல்வம் என்று கூறி வந்தனர். இதுவும் அதுபோல என்று நினைத்து, அனுமன் விடையைக் கொண்டே இராகவன் சொல்லின் செல்வன்' என்ற பட்டத்தை அனுமனுக்கு வழங்கினான்