பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 271 யாரிடம் எதைக் கூற வேண்டும்? சுக்ரீவனிடம் திரும்பிச் சென்ற அனுமன், வந்தவர்கள் யார் என்பதை சுக்ரீவன் மனங்கொள்ளும் முறையில் பேசுகிறான். இராமன் பரம்பொருள் என்பதைப் புலனடக்கம் காரணமாக எழுந்த பரஞானத்தால் அறிந்துகொண்டான், மாருதி, ஆனால் சுக்ரீவனிடம் இவ்வாறு கூறினால் அவன் மனத்தில் சென்று தைக்காது. ‘கஞ்சி வரதப்பா என்று அன்பர் ஒருவர் கூற, எங்கு வரதப்பா? என்று கேட்பவனைப் போல உள்ளான் சுக்ரீவன். அவனைப் பொறுத்தவரைக் கொக்குக்கு ஒன்றே மதி' என்ற பழமொழியை மெய்யாக்கும் மனநிலையில் உள்ளான். என்றாவது ஒருநாள், யாருடைய தயவினா லாவது வாலியை ஒழித்துவிட்டுத் தான் அரசு கட்டில் ஏற முடியுமா என்ற கனவில் இலயித்துள்ளவன். எனவே அறிவுமிக்க மாருதி பேசத் தொடங்கும்போதே, அவன் கவனத்தையும், கருத்தையும் தன் பக்கம் திருப்பும் முறையில் பேசுகிறான். 哆哆哆够郊学as台盗够逐兹岑多弱விரை செய்தார் வாலி என்ற அளவிலா வலியினான் உயிர்தெறக் காலன் வந்தனன்; இடர்க் கடல் கடந்தனம், எனா ஆலம் உண்டவனின் நின்று அருநடம் புரிகுவன் - (நட்புக்கோள் படலம்-2) தொகுத்தும் வகுத்தும் கூறல் புலனடக்கம் செய்தவன் உணர்ச்சிகட்கு இடம் கொடுப்பது இல்லை. ஆனால் வாலியைக் கொல்ல எமன் வந்தான்; நம் துயர் தீர்ந்தது என்று கூறிவிட்டுச் சிவபெருமானைப் போல ஏன் நடஞ் செய்ய வேண்டும்? தன் எஜமானனாகிய சுக்ரீவனை நன்கு அறிந்த மதியூகியாகிய மாருதி, தன் நடனம்தான், தான் சொல்வதில் சுக்ரீவனுக்கு நம்பிக்கை ஊட்டும் என்று