பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 + கம்பன் - புதிய பார்வை கருதுகிறான். அடக்கத்தின் உறைவிடமான மாருதியே அடக்கத்தை விட்டுவிட்டுக் குதிக்கிறான் என்றால், அவனைப் பொறுத்தமட்டில் உறுதியாக நம்பும்படி யானதும், தனக்கும் அவனுக்கும் நலம் பயக்கக் கூடியது மான செய்தி ஒன்றுள்ளது என்பதுதானே பொருள். எனவே மாருதி நடம், அமைச்சன் என்ற முறையில் தன் தலைவனான சுக்ரீவனுடைய கவனத்தைத் திருப்பி, இராமன் பால் கொண்டு சேர்க்க உதவும். வாலி விண்பெறக் காலன் வந்தனன் என்று கூறும் செய்திக்குச் சுக்ரீவன் உடனே செவி சாய்ப்பான் என்று மாருதி கருதியது முற்றிலும் பொருத்தமானதே. - இனிச் சுக்ரீவனுடைய கவனத்தைத் தன் பக்கம் திருப்பிவிட்ட பிறகு, அவன் மனங் கொள்ளுமாறு இராமன் வரலாற்றைக் கூற வேண்டும். அனுமன் தனக்கே உரிய முறையில் இதனைச் செய்கிறான். 1. ஆர் உயிர்க்கு அமுதமேபோல் உளார், . . . (நட்புக்கோள் படலம்-3) . எளிதின் நிற்கு அரசுதந்து உதவுவார். - நெடுங் கடவுள் வெம் படையினார். . - (5). தாடகை விளிந்து உருள வில்கோலினார். கால்இயம் பொடியினால் நெடிய கல்படிவம் ஆம் ஆலிகைக்கு, அரியபேர் உரு அளித்தருளினான். (6) தியம்பகம் எனும் வில் இறுத்தருளினான். வளை உடைப் புணரிசூழ் மகிதலத்திரு எலாம் இளையவற்கு உதவி, இத்தலை எழுந்தருளினான். (9) 8. விராதனை இராவகை துடைத் தருளினான். - 9, நீ, ஐயா! தவம் இழைத் துடைமையால், நெடுமணம் தூயையா உடைமையால், உறவினைத் துணிகுவார். (10)

இவ்வாறு தொகுத்தும் வகுத்தும், தன் 5ಣ6ು೧೯r மனங் கொளக் கூறிய அனுமனைக் கம்பநாடன் மந்திரம் கொடு