பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 273 + H. ' &F, ஞானசம்பந்தன்ډئي நூல் மரபு உணர்ந்து உதவுவான் (15) என்று குறிக்கிறான். மேலே காட்டிய ஒன்பது கூற்றுக்களும் இரண்டு வகையாகப் பிரியும். ஒன்று இராமன் வலிமையை எடுத்து விளக்கியது. இரண்டு அவன் கருணை உடையவன் என்று கூறியது. 3, 4, 6, 8 ஆகியவை இராமன் வீரம் பற்றியது. 1, 2, 5, 7 என்பவை அவன் கருணை பற்றியது. ஏன் இவ்விரண்டு இயல்புகளையும் விரிவாகப் பேசுகிறான் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். சுக்ரீவனின் பகைவன் வாலி. அவன் ஆற்றல் உலகம் அறிந்த ஒன்றாகும். சுக்ரீவனுக்குத் துணையாக எத்தனை பேர் வந்தாலும் அவனை வெல்வது இயலாத காரியம். இயற்கையின் இறந்த ஆற்றல் பெற்றவர்களே அவனுடன் நின்று போரிட முடியும். எனவே வந்தவனுடைய ஆற்றலை வரிசைப்படுத்திக் கூறுகிறான். அனுமன். கடவுள் வெம்படை தாங்கினார் என்பதால் வாலியின் வர்பலத்துக்கு ஈடுகொடுக்கக் கூடியவர்கள் என்பதும், அதற்கு ஆதாரம் வேண்டுமே என்பதற்காகவே தாடகை, கரன், விராதன் முதலியவர்களை அழித்ததையும் கூறுகிறான். சிவபிரானுடைய திரியம்பகம் என்ற வில்லை ஒடித்தமை உரைத்ததும் இராமனது ஆற்றலை விளக்கியவாறாயிற்று. - அரசு தந்து உதவுவார் இத்தனையும் கேட்ட பிறகு, வாலியை இராமன் வெல்ல முடியும் என்று நம்பினாலும், அடுத்து, அந்தச் சந்தேகப் பிராணிக்கு மற்றுமோர் ஐயம் பிறந்துவிடும். இத்துணைப் பாடுபட்டு வாலியைக் கொன்று கிட்கிந் தையை வெல்பவர் அதனைத் தாமே அடைய வேண்டும் என்றுதானே கருதுவார்கள். எனவே, புதிதாக வந்தவர்கள் ஆற்றல் உடையவர்களாக இருந்து வாலியை வென்றாலும், தனக்கு அதனால் என்ன ஊதியம் கிடைக்கப்போகிறது என்ற முறையில்தானே அவன் மனம் வேலை செய்யும்?