பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 + கம்பன் - புதிய பார்வை அதற்கு விளக்கமாக என்றது ஒன்றினை ஒன்றுபோல் கூறுந் துறை என்றும் எழுதுகிறார். இதற்கு மேற்கோளாக இன்ன நூல் என்று இன்று அறியப்பட முடியாத ஒரு நூலிலிருந்து பின்வரும் பாடலையும் எடுத்துக்காட்டுகிறார்: குருந்தம் ஒசித்தஞான்று உண்டால் அதனைக் கறந்தபடி எமக்குக் காட்டாய்-மறம்பெறாப் போரில் குருகுஉறங்கும் பூம்புனல் நீர்நாட மார்பில் கிடந்த மறு (தொல் புறத்திணை-5 உரை மேற்கோள்) (வைக்கோல் போரில் குருகுப்பறவை உறங்கும் நீர் நாடாகிய சோழ நோட்டின் தலைவனே! நீ குருந்த மரத்தை ஒடித்தபொழுது உன் மார்பில் கிடந்த மறுவை எங்ங்னம் மறைத்துக் கொண்டாய் என்பதனை எனக்குக் கூறுக.) உரையாசிரியர் கூறுவதுபோல் ஒப்புமைப்படுத்திக் கூறாமல், பெரும்பாணாற்றுப் படையும், இந்த மேற்கோள் பாடலும், சோழனைத் திருமால் என்றே குறிக்கின்றன என்பதை அறிதல் வேண்டும். - கம்பனுக்கு மூலம் யார்? இராம காதையின் குறிப்புகள் இரண்டும், புறத்திலும் அகத்திலும் வந்துள்ளமை முன்னர்க் குறிக்கப் பெற்றது. அக் காதையின் இன்னும் இரண்டு பகுதிகள் சங்கத்தை அடுத்த காலத்தில் பரவி இருந்தமையைப் பின்வரும் பாடல்கள் காட்டுகின்றன. • ஆள்வினை முடித்த அருந்தவ முனிவன் வேள்வி போற்றிய இராமன் அவனொடு மிதிலை மூதூர் எய்திய ஞான்றை மதியும்பட்ட மடக்கண் சீதை