பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 275 அவள் தேடுவார் நின் உறவினைத்துணிகுவார் நட்புக்கோள் படலம் 14) என்று மட்டும் கூறினானே தவிர, அவர்கள் சுக்ரீவனை நாடி ஏன் வந்தனர் என்று கூறவில்லை. தன்னிடத்தில் ஒரு பயனை நாடி வந்துள்ளனர் என்று தெரிந்தால் சுக்ரீவனைப் போன்ற சந்தேகப் பிராணிகட்கு அவர்கள்மேல் இருக்கும் மதிப்புத் திடீரென்று குறைந்துவிடும். அதனால்தான் தன் தலைவனின் பண்புகளை நன்கறிந்த மாருதி இதனைக் கூறாமல் விட்டுவிட்டான். இராமன் கருத்து இது என்று முன்கூட்டியே சுக்ரீவனிடம் அனுமன் கூறாமையால், இராமன் கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம் (34) என்று கூறினாலும், சுக்ரீவன் செவிகளில் அச்சொற்கள் ஏறவே இல்லை. இதன்பிறகு இராமனையும், சுக்ரீவனையும் சந்திக்குமாறு அனுமன் செய்ததும், இருவரும் நட்புக் கொண்டபின் சுக்ரீவன் இருப்பிடத்திற்கு அவர்களை அழைத்து வந்ததும், உணவு பரிமாறியதும், அதனை உண்ட பிறகு அவ்வீட்டில் பெண்கள் இல்லை என்பதை இராமன் அறியுமாறு செய்ததும், பொருந்து நல்மனைக்கு உரிய பூவையைப் பிரிந்துளாய் கொலோ நீயும் பின்? (35) என்று கேட்க வைத்ததும், அனுமன் மதிக் கூர்மையாலேயே யாகும். நா நலம் - இராமனை, நீயும் மனைவியைப் பிரிந்து வாழ்கிறாயா? என்று கேட்குமாறு செய்தவன் மாருதி, அவனாகக் கேட்ட பிறகு, வாலியைப் பற்றிப் பேசுகிறான் மாருதி முதன்முதலில் இராமனைச் சந்தித்துப் பேசும்பொழுது, வாலியால் துரத்தப்பட்டான் சுக்ரீவன் என்று கூறினானே தவிர, மனைவியை இழந்த வரலாற்றைக் கூறவில்லை. ஞாலம் கருதினும் கைகூடும் காலம் - s - - - கருதி இடத்தாற் செயின் (திருக்குறன்-483) என்பதை நன்கு அறிந்த அறிஞன் ஆதலால், காலம், இடம் அறிந்து பேசுகிறான். தம்பிக்கு நாட்டைக் கொடுத்த