பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 + கம்பன் - புதிய பார்வை வனிடம் முதலில் பரிவைப் பெறுவதற்கு, தம்பியின் நாட்டை அண்ணன் பிடித்துக்கொண்டு விரட்டிவிட்டான் என்று மட்டும் கூறினான். இப்பொழுது தன் சொற்களால் இராமனே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு நாடகம் ஆடிவிட்டான் மாருதி. இராமன் அவ்வாறு கேட்ட பிறகு, சுக்ரீவன் மனைவியைப் பற்றி ஒன்றும் முதலில் கூறாமல், 30 பாடல்கள் வாலியைப் பற்றியும், அவன் வீரம் பற்றியும் பேசிவிட்டு 31ஆவது பாடலில் உருமை என்று இவற்கு உரிய தாரமாம் அருமருந்தையும் அவன் விரும்பினான். இருமையும் துறந்து இவன் இருந்தனன். கருமம் இங்கு இது, எம் கடவுள்! என்றனன். (நட்புக்கோள் படலம்-67) இருவகைப் பயன்கள் நீயும் மனைவியை இழந்தவனா என்ற வினாவிற்கு ஆம்' என்பதுதானே நேரான விடை அதைக் கூறிவிட் டல்லவா இழக்க நேர்ந்த காரணத்தைக் கூற வேண்டும். அப்படி இருக்கச் சொல்லின் செல்வனாம் அனுமன், 'மற்றொன்று விரித்தல்' என்னும் குற்றம் தோன்றும்படி, 30 பாடல்களில் வாலியைப் பற்றிக் கூறுவது ஏன்? இவ்வாறு கூறுவதால் இரண்டு வகையான பயனை விரும்புகிறான் மாருதி. பகைவன் யார் என்பதை விவரமாகத் தெரிந்து கொண்டு பிறகே, அவன் ஆற்றல் எத்தகையது என்பதை அறிந்துகொண்ட பிறகே, இராகவன் ஒரு முடிவுக்கு வர முடியும். அப்படி அவன் முடிவுக்கு வர வாய்ப்பளிப்பதே நியாயமாகும். இரண்டாவது புதிதாக நண்பனாக வந்துள்ள இராகவன், எவ்வளவு தூரம் இந்த அண்ணன் தம்பிப் போராட்டத்தில் பங்கு எடுத்துக்கொள்ள விரும்புவான் என்பதையும் அறிந்துகொள்ள, ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். .