பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 277 இவ்விரண்டு பயன்கள் போக,நுண்ணறிவுடைய மாருதி வேறு ஒரு பயனையும் கருதி, இவ்வளவு விரிவாக வாலி பற்றிப் பேசுகிறான். ஒப்பற்ற வீரனாகிய இராகவன் மற்றோர் ஒப்பற்ற வீரனாகிய வாலி பற்றி அறியும்பொழுது, என்ன நினைக்கிறான் என்பதை அறிய வேண்டும். இராகவனை முதலில் தான் தனியாகச் சந்தித்தபொழுதே, அண்ணனால் துரத்தப்பட்டுச் சுக்ரீவன் இரலையின் குன்றத்தில் ஒதுங்கி (பதுங்கி) வாழ்கிறான் என்பதைக் குறிப்பிட்டுக் கூறினான். ஆனால் இராகவன் அதுபற்றி மேலும் விசாரிக்கவில்லை யாகலின், மாருதி மனத்தில் ஒர் ஐயம் இருந்துகொண்டே இருந்தது. எனவே வாலியைப் பற்றி இவ்வாறு விரிவாகப் பேசிக்கொண்டு வரும்போதே, இராகவன் முகத்தைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டே வருகின்றான். வாலியைப் பற்றிக் கேட்ட சூழ்நிலையில், தம்பியை வேண்டு மென்று எந்தத் தவறும் செய்யாத நிலையிலும் கொடுமைப் படுத்தினான் என்ற செய்தியை அறியும்போது, இராகவன் முகத்தில் சினக்குறி தோன்றியிருக்க வேண்டும். அதைக் கண்டு, இதுவே நல்ல சூழ்நிலை என்று கருதிய மாருதி, இவன் தாரத்தையும் அவன் வவ்விக் கொண்டான் என்று கூறி முடித்தான். அவன் எதிர்பார்த்தபடியே இராகவன் முகம் இறுகிக்கொண்டே வந்தது போலும், இந்த வார்த்தை களை அனுமன் கூறியவுடன் இராகவன் வெடிக்கின்றான். உலகம் ஏழினோடு எழும் வந்து, அவன் உயிர்க்கு உதவி விலகும் என்னினும், வில்லிடை வாளியின் வீட்டி தலைமையோடு, நின்தாரமும், உனக்கு இன்று தருவென் புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு, என்று புகன்றான். . நட்புக்கோள் படலம்-70) (பதினான்கு உலகங்களும் அவனைக் காக்க உதவி செய்யினும், வில்லில் அம்பைப் பூட்டி உனக்கு அரசையும், மனைவியையும் இன்று தருகின்றேன். அவன் இருப்பிடம் காட்டு என்றான்.) - -