பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 279 செங்கண் வில்கரத்து இராமன், அத்திரு நெடுமாலே! இங்கு உதித்தனன், ஈண்டு அறம் நிறுத்துதற்கு.. - நட்புக்கோள் படலம்-74) என்னை ஈன்றவன், இவ்வுலகு யாவையும் ஈன்றான் - தன்னை ஈன்றவற்கு அடிமைசெய்; தவம் உனக்கு அஃதே உன்னை ஈன்ற எற்கு உறுபதம் உளது என உறைத்தான் - (75) துன்பு தோன்றிய பொழுது உடன் தோன்றுவான், எவர்க்கும் முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என்? என்றுஇயம்ப, அன்பு சான்று, என உரைத்தனன்; ஐய! என் ஆக்கை என்பு தோன்றல உருகின எனின், பிறிது எவனோ? - - (77) அனுமனுடைய ஆன்ம வளர்ச்சி எத்தகையது என்பதை அறிய இப்பகுதி வாய்ப்பு அளிக்கின்றது. 77ஆவது பாடலில் துன்பு தோன்றியபொழுது உடன் தோன்றுவான்' என்ற அடி ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. அதுவரை ஆண்டவனை நினைக்காதவன்கூடத் துன்பம் வந்தவுடன் உடனே ஆண்டவனைத்தான் நினைக்கிறான். நோயுளார் வாயுளான் என்னும் தேவாரம், அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்பது பிற்காலத்துப் பாடல். எனவே, சுக்ரீவனுக்குப் புரிகின்ற வகையில் இராமன் யார் என்பதை எடுத்து விளக்கும் மாருதியின் திறம், அறிந்து மகிழ்தற்குரியது. - இதே மாருதிதான், இராவணன் எதிரே வேறுவி மாகப் பேசுகிறான். நீ திருமாலா, சிவபிரானா? என்று கேட்கும் இராவணனுக்கு, நீ சொன்ன புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன்' என்று கூறுகிறான். அப்படியானால் இரண்டு விதமாக அனுமன் பேசக் காரணம் யாது என்று சிந்திப்பதில் தவறு ஏதும் இல்லை. மும்மூர்த்திகள் பற்றிய செய்திகளை மட்டும் அறிந்தவன்