பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 + கம்பன் - புதிய பார்வை சுக்ரீவன். அதற்குமேல் இறை இலக்கணத்தை யாரேனும் பேசத் தொடங்கினால் அவன் காதுகளில் அவை ஏறா. அவனுடைய அறிவின் அளவு அதனை ஏற்றுக்கொள்ளும் வளர்ச்சியையும் பெற்றிருக்கவில்லை. எனவே திருமாலுக்கு அடிமை செய்' என்று தந்தை கூறியதைக் கூறி, வந்தவன் திருமாலே என்ற விவரத்தைக் கூறுகிறான். யார் யார், எந்த அளவு அறிவு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முடியுமோ, அந்த அளவை அறிந்து அவர்கட்கு வழங்குபவனே சிறந்த அறிவாளி எனப்படுவான். அடுத்த படியாகத் தன் கல்விப் பெருக்கம், அனுபவ அறிவு பரஞானம் ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்தி இறை இலக்கணத்தை அதனை முற்றிலும் அறிந்துகொள்ளக் கூடிய இராவணன் எதிரே அழகாகப் பேசுகிறான். அங்கே நான்முகன் திருமால் சிவன் என்றவர்கள் பற்றிய பேச்சே இல்லை. பரம்பொருளின் இலக்கணம் அதனை அனுமன் தருக்க முறையில் பேசுகின்ற ஒரே இடம் இராவணன் எதிரில்தான். - - மாருதி முடிவுக்கு வாராதது ஏன்? - இனி அவனுடைய சொந்த அனுபவத்தின் அடிப் படையில், இராமன் பற்றி என்ன நினைத்தான் என்பதை, அறிய முயல்வது பயனுடையதாகும். இரலைக் குன்றத்தில் இராமன் தம்பியொடும் வருகின்ற பொழுது, அனுமன், அவர்களோ தருமம் ஆவார்? (அனுமப் படலம்-12, மீளா நெறி உய்க்கும் தேவரோதாம்? (13) "பிறப்பை அறுக்கும் தேவரோ?” என்பதில் ஒரளவு அவனுடைய ஐயம் தெரிகிறது என்றாலும், இவர் நிலைமை தேர்வது எக்கிழமை கொடு ? (5) என்ற நிலையில்தான் இருக்கிறான். அடுத்துத் தன் தந்தை கூறிய அடிப்படையில் தன் எலும்பு உருகுகின்றதையும், தன்