பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 + கம்பன் - புதிய பார்வை இதனை அப்படியே தன் மனத்தில் வாங்கிக்கொண்டு இலங்கை செல்கிறான் அனுமன். பிறர் காண முடியாச் சிறிய வடிவம் எடுத்துக்கொண்டு இராவணன் அரண்மனை யில் நுழைந்த அனுமன், ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டு செல்கிறான். அந்த நிலையில் ஒரு மாபெருந் தவற்றைச் செய்கிறான். மகளிர் உறங்கும் அந்தப்புரம் சென்று காணும்பொழுது, இராமன் கூறிய அடையாளங்கள் பெரும் பகுதி பொருந்தி இருக்கும் ஒர் அணங்கு உறங்குவதைக் &@T t_froT. அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெந் தீ துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஒர் துயர் உழந்து, இவை சொன்னான். எற்பு வான்தொடர் யாக்கையில் பெறும் பயன் இழந்தனள்! இது நிற்க அற்பு வான்தளை இற்பிறப்பு அதனொடும் இகந்து தன் அருந் தெய்வக் கற்புநீங்கிய கணங்குழை இவள்ளனின், காகுத்தன் புகழொடும் - பொற்பும், யானும், இவ் இலங்கையும், ஆக்கமும் பொன்றுதும் இன்று என்றான், - (ஊர்தேடு படலம்-200 என்புடன் கூடிய உடம்பெடுத்த பயனை இவள் இழந்தாள். மேலும் அன்புடன் கூடிய நற்குடிப்பிறப்பையும் விட்டு, தன் கற்பும் நீங்கிய கணங்குழை இவள் எனில், காகுத்தன் புகழொடு யானும் இலங்கையில் இன்றே இறப்பது சரி.) அனுமன் கண்டது இராவணன் மனைவியும், கற்புடைப் பெருமாட்டியும் ஆகிய மண்டோதரியையே ஆகும். இராமன் வருணித்த அழகு ஒருபுடை ஒத்தலின்