பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 283 சீதையோ என ஐயுறுகின்றான். அனுமன் இத்தவற்றை அவன் செய்ய முழுதும் பொறுப்பானவன் இராகவனே ஆவான். கடுமையான பிரமச்சரிய விரதத்தில் நிற்கும் அனுமனிடம் அவன் கூறிய அடையாளம் அரண்மனை யிலிருந்த சீதை பற்றியது. ஆகவேதான், அனுமன் இத்தவற்றைச் செய்தான். என்றாலும் அவனுடைய அகமனம் இம்முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே சற்று நின்று, உண்மையை அறிந்து விடுகிறான். பத்துச் சதவீதச் சந்தேக நீக்கம் இனிப் பல இடங்கள் சென்று தேடி, இறுதியாக அசோகவனத்தில், ஒரு மரக்கிளையின் மேல் நின்று, கீழே இருக்கும் சீதையைக் காண்கிறான். முதன்முறையாக அவளைக் கண்ட உடன் அனுமன் மனத்தில் தோன்றிய முதலாவது எண்ணம் பற்றி இதோ கம்பனே கூறுகிறான். மூவகை உலகையும் முறையின் நீக்கிய பாவிதன் உயிர்கொள்வான் இழைத்த பண்புஇதால் ஆவதே அரவணைத் துயிலின் நீங்கிய தேவனே அவன் இவள் கமலச் செல்வியே! (காட்சிப் படலம்-66, (மூன்று உலகங்களையும் செந்நெறியில் செல்ல ஒட்டாமல் நீக்கிய பாவியாகிய இராவணன்) தன் உயிரை இராமன் கொள்வதற்கு வகுத்த வழி இதுவோ? அவன் அரவின்மேல் துயில் நீங்கியவனே ஆவான். இவள் தாமரை உறையும் செல்வியே ஆவாள்.) பிராட்டியைத் தவக்கோலத்தில் பார்த்தவுடன் அனுமன் நினைவு இராமனிடம் தாவிற்று. காரணம். தொண்ணுறு பங்கு அவன் இன்னான் என்று தெரிந் திருந்தும், பிராட்டி இன்மையால் முழுவதுமாக அதை ஏற்க விரும்பாமல் இருந்தவனாகலின், இப்பொழுது