பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 + கம்பன் - புதிய பார்வை இவளை முதன்முறையாகப் பார்த்தஉடன், பழைய நினைவு வலுப்பட்டதாகலின், துயிலின் நீங்கிய தேவனே அவன் என்று அதை முதலில் கூறி, அதற்குக் காரணம் கற்பிப்பவன் போல, இவள் கமலச் செல்வியே என்று முடிக்கிறான். - அசோகவனத்தில் பிராட்டி இருந்த கோலத்தைக் கண்ட அவன், மலை இடுக்கில் மழை இன்றி வாடிய மருந்துச் செடி உலர்ந்து நிற்பதைப் போன்று, அவள் காட்சி அளிப்பதைக் கண்டு, இதோ பேசுகிறான்: பேண நோற்றது மனைப் பிறவி, பெண் மைபோல் நாணம் நோற்று உயர்ந்தது, நங்கை தோன்றலால் மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம் காண நோற்றிலன், அவ்ன் கமலக் கண்களால்! - (காட்சிப் படலம்-73) இந்த நங்கை பிறத்தலால் குடிப்பிறப்பும் நாணமும் உயர்ந்தன; தவஞ்செய்துகொண்டு இங்கு இவள் இருக்கும் நிலையை, அவன் காணக் கொடுத்து வைக்கவில்லையே! கமலம் போன்ற கண்கள் இருந்து என்ன பயன்: அறிவின் மேம்பட்ட்வனாகிய மாருதிகூட உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு பேசத் தொடங்குகிறான். அவன் கமலக் கண்களால் இவளைப் பார்க்கும் நிலை ஏற் பட்டால், இவள் இப்படி வாடி, வருந்தி, மாண நோற்று இருக்க வேண்டிய நிலையே வந்திராதே என்பதனைக்கூட மறந்துவிட்டுப் பேசுகிறான். தவம் செய்த தவமாம் தையல் என்று பின்னரும் பேசுகிறான். தன் புகழ் பேசான் - - இலங்கையில் பெரும் போர் நிகழ்த்தி, கறங்கு கால்புகா, கதிரவன் ஒளிபுகா அந்நகரை எரியூட்டி, உடல் முழுதும் புண்களுடன் மீண்ட அனுமனை, அவன்