பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 285 கூடவந்த சாம்பன் முதலானவர்கள் நடந்ததைக் கூறுமாறு கேட்கவும், அனைத்தையும் கூறி, தான் வெற்றி பெற்ற மையை மட்டும் கூறவில்லையாம். - ஆண்தகை, தேவி உள்ளத்து அருந்தவம் அமையச் சொல்லி, பூண்டபேர் அடையாளம் கைக் கொண்டதும் புகன்று, போரில் நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும், நெருப்புச் சிந்தி மீண்டதும் விளம்பான்-தான் தன் வென்றியை உரைப்ப வெள்.கி. (திருவடி தொழுத படலம்-9) (தேவி அருந்தவம் ஆற்றுவதையும், அப்பெருமாட்டி யிடம் அடையாளம் கைக்கொண்டதும் கூறிவிட்டு, அரக்கருடன் போரிட்டதையும், இலங்கையை எரியூட்டி யதையும் கூறவில்லை. ஏன்? தானே தன் வெற்றியை உரைப்பதற்கு வெட்கப்பட்டமையால்.) யாரும் உட்செல்ல முடியாத இலங்கையின் உள்ளே புகுந்ததும், தேவர்களும் அஞ்சி நடுங்கும் அரக்கருடன் போரிட்டதும் தீக்கடவுளும் உள்நுழைய முடியாத இலங்கையை எரியூட்டியதும், யாரும் கனவினுங் கருத முடியாத செயல்களன்றோ? அப்படி இருந்தும், இந்த வெற்றிகளை அனுமன் கூறவில்லை என்றால், அவ னுடைய பண்பாட்டின் சிறப்பை என் என்று கூற முடியும்? இத்தகைய பண்பாடும், தற்பெருமை இன்மையும் அனுமனுக்கு எவ்வாறு கிடைத்தன ; அவனுடைய புலனடக்கத்தால் பண்பாடு வந்துள்ளது. அதன் பயனாக அகங்கார மமகாரங்கள் அறவே நீங்கினமையின், நடப்பவெல்லாம் இறைவன் செயல் என்ற உறுதி ஏற்பட்டு விட்டது. இறைவன் அருளால், அவனுடைய கருவியாக இருந்து, தான் இவற்றைச் செய்ததாகவும், இதில் தான்