பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 + கம்பன் - புதிய பார்வை பெருமையோ அகங்காரமோ அடைவதற்கு ஒன்றும் இல்லை என்பதும், அந்த அறிஞன் கண்ட பேருண்மை களாகும். இந்தப் பண்பாடுடையார் நாணம் என்னும் சிறப்பினைப் பெற்று விளங்குபவர். நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை - நானால் உயிர் மருட்டியற்று. (திருக்குறள்-1020) (தம் மனத்தில் நாணம் இல்லாதவர், உயிருடன் உலவுதல் மரப்பொம்மை இயந்திரக் கயிற்றினால் உலா வருதல் போலாம்.) - அனுமன் என்ற பெருமகன், எத்துணை அடக்கமும் நாணமும் உடையவன் என்பதை விளக்க, இன்னும் இரண்டொரு எடுத்துக்காட்டுகளையும் காணலாம். ஏவல் கூவல் பணி அசோக வனத்தில் சிறை இருந்த செல்வியைக் கண்டு பேசிய பிறகு விடைபெற நிற்கின்றான் அனுமன். அந்த நிலையில், தம்பி ஒருவனைத் தவிர, வேறு துணையே இல்லையே தன் தலைவனுக்கு என்று வருந்தும் பிராட்டிக்குச் சுக்ரீவன் படைபலம் பற்றிக் கூறவந்த அனுமன், தன்னைப் பற்றியும் கூறவேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளான். - அண்ணல் பெரியோன், அடிவணங்கி, அறிய உரைப்பான், அருந்ததியே! வண்ணக் கடலின் இடைக்கிடந்த மணலின் பலரால் வானரத்தின் எண்ணற்கு அரிய படைத்தலைவர், இராமற்கு அடியார், யான் அவர்தம் பண்ணைக்கு ஒருவன் எனப்போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன். சூடாமணிப் படலம்-14