பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 287 (அண்ணலாகிய அனுமன் பிராட்டியின் திருவடிகளை வணங்கி, தாயே! வானரப்படைத் தலைவர்கள் இராமனுக்கு அடியார்களாய் உள்ளவர்கள், ஒளி பொருந்திய கடலிற்கிடந்த மணலைக்காட்டிலும் பலராவர். அந்தப் பெரிய பண்ணைக்கு அடையாளமாக யான் ஒருவன் வந்தேன். அவர்கள் படைத்தலைவர்கள் யானோ அவர்கட்கு எடுபிடி ஆளாய் உள்ளவன்' என்கிறான்.) பாடலின் இறுதியில் அப்பெருமகன் படைத்தலைவர் கடலிடு மணலினும் பலராவர்; அவர்களுள் தான் எடுபிடி வேலை செய்யும் பணியாளன் என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொள்கிறான், செயற்கருஞ் செயல்களை அநாயாச மாகச் செய்பவனும், பிராட்டியின் இருப்பிடத்தைக் கானும் பேராற்றல் படைத்தவனும், இராவணன் எதிர்ே இருந்து கொண்டு புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன் என்று கூறும் ஆற்றல் பெற்றவனுமான மாருதி, தன்னைப் பற்றிக் கூறவேண்டிய நிலைமை வரும்பொழுது, ஏவல் கூவல் பணி செய்வேன்' என்று கூறுகிறான் என்றால், பணியுமாம் என்றும் பெருமை (திருக்குறள்-978) அடக்கம் அமரருள் உய்க்கும் (திருக்குறள்-12) என்னும் குறள்களுக்கு இலக்கணமாய் விளங்குகிறான் என்பதை நாம் எளிதில் அறியலாம் அன்றோ? நம்பிக்கை ஊட்டப் பயன்பட்டது r சொல்லின் செல்வன் என்று இராகவ்னால் பட்டம் சூட்டப்பெற்ற மாருதி இரண்டு இடங்களில் தன் சொற்செல்வத்தை வெளிக்காட்டுகிறான். மனம் உடைந்துபோன பிராட்டி, இனித் தன் கணவன் தன்னை மீட்பான் என்ற நம்பிக்கையை இழந்து, அனுமனிடம் சில செய்திகள் கூறுகிறாள். பத்துப் பாடல்களில் தன் மனக் கருத்தை வெளியிடும் அவள் இறுதியாகக் கூறிய சொற்கள்,