பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 + கம்பன் - புதிய பார்வை அவள் நம்பிக்கை இழந்து பேசுகிறாள் என்பதனுடன், பெண்களுக்கே உரிய மன உளைச்சலும் வெளிப்படக் காரணமாக உள்ளன. இராகவன் எப்பொழுது வருவான் என்று வருந்தித் தளர்ந்துள்ள உலகைத் திருப்திப்படுத்தவும், தாயாரின் துயர் துடைக்கவும், பரதன் மன வருத்தத்தைப் போக்குதற்கும் அயோத்திக்குப் போய்விடுவானே அல்லாமல், என் ஒருத்தி பொருட்டாக இங்கே எங்கே வரப்போகிறான்? அனுமனே! எந்தை, தாய் முதலிய உறவினர்க்கும் என். வணக்கம் கூறுக. சுக்ரீவனிடம் கூறி, இராமனைத் தொடர்ந்து காத்துச் சென்று, அயோத்தியில் முடிசூட்டச் சொல்லுக என்ற பொருளில், தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும் அன்னை நோய்க்கும், பரதன் அங்கு ஆற்றுறும் இன்னல் நோய்க்கும், அங்கு ஏகுவது அன்றியே என்னை நோக்கி, இங்கு, எங்ங்ணம் எய்துமோ? எந்தை, யாய் முதலிய கிளைஞர் யாவர்க்கும் வந்தனை விளம்புதி; கவியின் மன்னனை ‘சுந்தரத் தோளனைத் தொடர்ந்து காத்துப்போய் அந்தம் இல் திருநகர்க்கு அரசன் ஆக்கு'............. (சூடாமணிப் படலம்-37, 38) என்று கூறுகிறாள். அவளுடைய மனத்துயரின் ஆழத்தை இச்சொற்களிலிருந்து எளிதில் கண்டு கொள்ளலாம். இரண்டாவது பாடலில் வணக்கம் சொல்க' என்று கூறுகிறவள், தன் தாய் தந்தையரை மட்டும் நினைவுகூர்ந்து சொல்வது, வேதனையின் அளவைக் காட்டும். இவ்வார்த்தைகளைக் கேட்ட மாருதி 35 பாடல்களில் பிராட்டிக்கு அமைதி கூறுகிறான். சாதாரண முறையில் கூறினால் எடுபடாது என்று நினைத்த அந்த அறிஞன், நகைச்சுவையுடன், தொல்காப்பியங் கூறும் அங்கத முறையில் பேசுகிறான்.