பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அ. ச. ஞானசம்பந்தன் 289 வீவாய் நீ இவண்? மெய் அஃதே? ஒய்வான் இன்னுயிர், உய்வானாம்! போய், வான் அந் நகர் புக்கு அன்றோ? வேய்வான் மெளலியும் மெய் அன்றோ? (சூடாமணிப் படலம்-40) (நீ இங்கு இருந்து உயிர் விடுவாய், அதைப் பார்த்து அவன் உயிர் விடானாய் அயோத்தி திரும்பிச் சென்றால் அன்றோ முடிசூடும் நிகழ்ச்சி நடைபெறுவது?) கைத்து ஒடும் சிறை, கற்போயை வைத்தேன் இன்னுயிர் வாழ்வானாம்! பொய்த்தோர் வில்லிகள் போவாராம்! இத்தோடு ஒப்பது யாது உண்டோ? (41) (யாரும் வெறுத்து ஓடுகின்ற சிறையில் கற்புடைய உன்னை வைத்தவன் உயிருடன் வாழ்வான்; பொய்யாக வில்லைத் தாங்கிய இருவரும் அவனைப் பழிவாங்காமல் போவார்கள் என்றால், இதுபோன்ற வேறு ஏதேனும் வேடிக்கை உண்டா?) இறுதியாக அனுமன் தனக்கே உரிய முறையில் ஒரு சபதம் செய்கின்றான். குரா வரும் குழலி! குறித்த நாளினே, விரா அரு நெடுஞ் சிறை மீட்கிலான் எனின் பராவரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு இராவணன் அவன்; இவன் இராமன் என்றனன் (74) (மருதோன்றிப் பூ மணம் வீசும் கூந்தலை உடையாய்! நீ குறித்த நாளில் இந்த நெடுஞ் சிறையிலிருந்து நின்னை மீட்கவில்லையானால், பழியும் பாவமும், பற்றுதலினால், அவன் இராவணன் என்றும் இவனே இராமன் என்றும் ஏசப்படுவர்.) இந்த முறையில் சற்றுக் கடுமையாக அனுமன் பேசினதால்தான், பிராட்டி தன் துயரை நீக்கி ஒகை