பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 + கம்பன் - புதிய பார்வை பாழிய பனைத்தோள் வீர! துணையிலேன் பரிவு தீர்த்த வாழிய வள்ளலே! யான் மறுஇலா மனத்தேன் என்னின் ஊழி ஒர் பகலாய் ஒதும் யாண்டு எலாம், உலகம் ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள். (உருக்காட்டுப் படலம்-72 (வலி பொருந்திய தோளையுடையாய், துணை இல் லாதவளாகிய என் துயரம் தீர்த்த வள்ளலே! வாழ்க! யான் குற்றமற்றவள் என்றால், ஒர் ஊழியை ஒரு பகலாய் ஒதும் அத்தகைய பகல்கள் நிறைந்த ஆண்டுகள் எல்லாம். பதினான்கு உலகங்களும் அழிகின்ற காலத்தும், இன்று போல் என்றும் இருப்பாயாக.) இந்த வாழ்த்தில் உள்ள சிறப்பைக் கவனிக்க வேண்டும். இன்று என இருத்தி என்றால், அனைத்தும் பெற்று, புலனடக்கத்துடன், வேண்டாமை என்ற செல்வத்துடன், வாழும் இந்த நிலை என்றும் மாறாமல் இருப்பாயாக என்று வாழ்த்துவதே புதுமை ஆகும். அறவாழ்க்கை முதன்முதலில் பரம்பொருள் மானுடனாக வந்துள் ளதை அறிந்தவன் இந்த அனுமன்தான். ஆனால் ரீ என்று சொல்லப்படுகிற புருஷாகார வைபவத்தை அடைந்தல்லது, இறையனுபவத்தில் திளைக்க முடியாது. அவனுடைய புலனடக்கம் பற்றி முன்னரே குறிப்பிடப் பெற்றது. அடுத்து சத்திய தரிசனம் செய்ய முயல்பவன் அறத்தைக் கடைப்பிடித்து வாழ வேண்டும். புலன்களை அடக்கி, அறத்தில் நின்று பொய்யை ஒழித்தால் முன்னேற்றம் தானே வரும். அனுமன் ஒன்றையும்