பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 293 மூன்றையும் முற்றிலும் கடைப்பிடித்தவன் என்பது கவிக் கூற்றாகவும், இராகவன் கூற்றாகவும் எடுத்துக்காட்டப் பெற்றது. இனி அவனுடைய அறநெறி வாழ்க்கை பற்றிக் கவிஞன் பேசுவதையும் காண்டல் வேண்டும். முனிவு எனும் வடவை வெங்கனலை அறிவு எனும் பெரும் பரவை அப் புனலினால் அவித்தோன் (ஊர்தேடு படலம்-129) அறவன் (பொழில் இறுத்தபடலம்-30) அறவோன் (அக்ககுமாரன் வதைப் படலம்-34) இந்திரசித்தன் விட்ட அயன் படைக்கு வணக்கஞ் செலுத்தி, அதனால் கட்டப்பெற்று அனுமன் கீழே சாய்ந்ததைக் கூறும் கவிஞன் அறக்கடவுளின் கண்ணில் நீர் பெருகச் சாய்ந்தான் என்கிறான்.) அண்ணல் மாருதி, அன்று, தன்பின் சென்ற அறத்தின் கண்ணின் நீரொடும்.........சாய்ந்தான். - (பாசப் படலம்-83) அறத்துக்கு ஆங்கு ஒரு தனித்துணை என நின்ற அனுமன் (பாசப் படலம்-87) மாருதி அறத்தை ஒம்புவான் கும்பகர்ணன் வதைப் படலம்-260) தருமம் என்று அறிஞர் சொல்லும் தனிப்பொருள் (வேலேற்ற படலம்-44) தீண்ட அரும் தீவினை தீய்க்கத் தீர்ந்து போய் மாண்டு, அற உலர்ந்தது. மாருதிப் பெயர் ஆண் தகை மாரிவந்து அளிக்க ஆயிடை ஈண்டு அறம் முளைத்தென, முளைத்தது இந்துவே! (ஊர்தேடு படலம்-52) (கொடிய தீவினை சுடுதலால் வன்மை தீர்ந்து அறக் காய்ந்து மடிந்த அறம் எனும் பயிர், மாருதி என்ற மாரி வந்ததால் முளைத்ததுபோல் நிலாப் புறப்பட்டது.)