பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 + கம்பன் - புதிய பார்வை அறந்தலை நிறுத்தத் தோன்றினான் இராகவன். அவனுக்கு உறுதுணையாக நிற்கப் போகிறான் அனுமன், எனவே அவனும், அறத்தின் அடிப்படையில் வாழ்க்கை நடத்துபவனாகத்தானே இருத்தல் வேண்டும்? இந்த அறத்தின் தனித்துணையாக உள்ள அனுமனுடைய வாழ்வில் நடைபெற்ற ஒப்பற்ற நிகழ்ச்சி ஒன்றை இலைமறை காயாகக் கவிஞன் கூறுகிறான். ஜோதி தரிசனம் புலனடக்கம், அறவாழ்வு, அன்புடைமை, அகங்கார மமகார அழிவு, பணிவுடைமை, தொண்டுள்ளம் இவற்றால் நிறைந்துள்ள ஒருவனுக்கு இறையருள் கிட்ட வேண்டியது முறைதானே. இராமனை நேரே காண்பதுதான் இறையருள் என்றால், இராவணன், கவந்தன் முதலியோரும் இராமனை நேரே கண்டவர்கள் தாமே. எனவே, ஆன்மிக முறையில் ஏனையோருக்குக் கிட்டாத ஒன்று அனுமனுக்குக் கிடைக்க வேண்டும். அதற்காகவே சூடாமணிப் படலத்தின் இறுதிப் பகுதியில் பிராட்டி அனுமனிடம் சூடாமணியைக் கொடுத்தாள் என்று கூறுவதற்கு முதல் பாட்டில், சூடாமணி காட்டினாள் என்று கூற வரும்பொழுது, ஒரு துணுக்கத்தை வைத்துக் கூறுகிறான். கூந்தல் மென்மழை கொள் முகில்மேல் எழுகோளின் வேந்தன் அன்னது; மெல்லியல் தன் திருமேனி சேந்தது! அந்தம்இல் சேவகன் சேவடி என்னக் காந்து கின்றது; காட்டினள். மாருதி கண்டான். (சூடாமணிப் படலம்-82) (கூந்தலைப் போன்று கருமையுடைய மேகக் கூட் டத்தின் மேல் எழுகின்ற கோள்களின் அரசன் ஆகிய கதிரவனை ஒப்பது; பிராட்டியின் உடம்பில் பொருந்தி இருந்தது; முடிவு இல்லாத வீரனாகிய இராகவன்