பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 295 திருவடிகளைப் போல ஒளிவிடுகின்றது; அதனைப் பிராட்டி காட்டினாள்; மாருதி கண்டான். இதன் முன்னர் மூன்று பாடல்களில், அதன் ஒளியைப் பற்றியே கவிஞன் பேசுகிறான். சூடாமணி என்ற சொல்லே இந்த நான்கு பாடல்களிலும் இல்லை. பிராட்டி தன் துணியில் மறைத்து வைத்திருந்ததை வெளியே எடுத்தாள் என்பது முதற் பாடல். கையில் எடுத்து (எதை என்று கூறவில்லை), இராமன் நினைவில் ஏங்கினாள்; அனுமன் இது என்ன என்று வியந்தான்; உலகம் ஏழிலுமுள்ள இருள் அனைத்தையும் விழுங்கியது அது என்பது, இரண்டாவது பாடல். கதிரவன் இந்த இலங்கை மீது வந்தான் என்று கொடிய கண்களை உடைய அரக்கர் ஐயுற்றனர். தாமரை மலர்ந்தது என்பது மூன்றாவது பாடல். நான்காவது பாடல், மேலே முழுவதுமாகத் தரப் பெற்றுள்ளது. இந்த நான்கு பாடல்களிலும், சூடாமணி குறிப்பிடப்படவில்லை. மேலாகப் பார்க்கும்பொழுது, இந்த நான்கு பாடல்களும் சூடாமணியின் சிறப்பையும், ஒளியையும் விளக்குவன என்று பொருள் கொள்வதில் தவறு இல்லை. ஆழ்ந்து நோக்கினால் வேறு ஏதோ ஒரு கருத்தையும் இதனுள் ஆசிரியன் கூற விழைகிறான் என்று எண்ணத் தோன்றுகிறது. நான்காவது பாடலை மறுபடியும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். அந்தமில் சேவகன் சேவடி என்னக் காந்துகின்றது' என்பதுதான் திறவுகோல். சூடாமணியின் ஒளிக்கு இராகவன் மேனியைக் கூறி இருந்தால் சரி. முன்னரே, அவன் மேனியில் வெய்யோன் ஒளி மறைந்தது' என்றும் கூறியுள்ளான். எனவே, அவன் மேனிபோல் ஒளி விடுகிறது என்று கூறி இருந்தால் அதுபற்றிக் கவலை இல்லை. அதனை மாற்றி சேவகன் திருவடி போலக் காந்துகின்றது என்று கூறுவது வியப்பைத் தருகின்றது. பரம்பொருள் உருவம் அற்றது என்பதனை அனைவரும்