பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் - 297 அப்படியானால் உடனே அவனுக்கு ஏன் அருள் செய்யவில்லை! தீட்சை செய்தல்' என்று இதனைக் கூறுவர். நயன, ஸ்பரிச, திருவடி தீட்சை என்று இது பலவகைப்படும். கண்களால் பார்த்த மாத்திரத்தில் விளக்கம் பெறுமாறு செய்வது நயன தீட்சை எனப்படும். உடம்பின் ஏதாவதொரு பகுதியைத் தன் கை அல்லது ஒரு கருவி கொண்டு தொட்டுச் செய்வது ஸ்பரிச தீட்சை எனப்படும். திருவடி தீட்சை என்பது முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அவனை மற்றொன்றாக மாற்றுவதாகும். அவரவர் மனநிலை, பக்குவம் என்பவற்றை ஒட்டி இத்தீட்சைகள் செய்யப் பெறும். இறைவன் கருணைக்கு ஆளாக வேண்டுமெனில் அன்னையின் மூலமாகவே அது நடைபெற வேண்டும் என்று, இந்நாட்டவர் கருதினர். நாம ரூபங் கடந்த பொருளுக்கு ஆண், பெண் வேறுபாடு கற்பித்து அன்னையின் அருள் வேண்டும் என்று கூறுவது சரியா என்ற வினா எழலாம். ஒரே பரம்பொருள் தான் செய்கின்ற செயலால், பல பெயர்களைப் பெறுகின்றது. பணிமனையில் அலுவலர் என்றும், மனைவிக்குக் கணவர் என்றும், குழந்தைகளின் தந்தை என்றும், நண்பர் களிடத்தில் நண்பன் என்றும், ஒரே மனிதன் பெயர் பெறுவதுபோல, இங்கும் அருள் செய்யும் தலைவன் அவனேயாயினும் அவனுடைய கருணையைத் தாய் என்று குறியீட்டால் கூறுவர். இறைவனை அவனுடைய கருணையிலிருந்து பிரிக்க முடியாது. ஆகலின், பிராட்டி யைப் பெருமாளிடத்திருந்தும், உமையைச் சிவபெரு மானிடமிருந்தும் பிரித்தல் இயலாது என்றும் கூறுவர். சூடாமணியும் ஒரு குறியீடா? அனைத்துப் பண்புகளும் நிரம்பி, நீக்கவேண்டிய குறை எதுவுமில்லாமல் உள்ள அனுமனுக்கு தீட்சை செய்யப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. எனவே பிராட்டி திருவடி