பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 - கம்பன் - புதிய பார்வை போன்ற ஒளியுடைய ஒன்றைக் காட்டினாள்; அவன் கண்டான் என்று, குறிப்பாகக் கூறிவிட்டான் கவிஞன். இந்தக் குறிப்பைக் கூறத்தான் காந்துகின்றது காட்டினாள் என்று கூறினான். அனுமனுக்கு ஒளிக்காட்சி (ஜோதி தரிசனம்) காட்ட விரும்பினாள் என்பதைத்தான் காட்டினாள் என்றான். இறைவன் கருணை மிகுதியால் இக்காட்சியைக் காட்டினாலும், அதனைக் காணும் தகுதி உடையவர்கள் மட்டுமே அதனைக் காண முடியும். அனுமனைப் பொறுத்தவரை அவள் காட்டினாள்; மாருதி கண்டான். மேலும், காப்பிய நோக்கில் பார்த்தால் அவள் காட்டியது சூடாமணியை, சூடாமணி என்பது நடு வகிட்டில் நெற்றிக்கு நேரே தலையில் அணியும் அணியாகும். நடு வகிட்டில் நெற்றியில் படும்படி ஒர் அணியை அணிந்தால் அது நடுநெற்றியில் இரு புருவங்கட்கு மத்தியில் தொங்கிக் கொண்டிருக்கும். இரு புருவங்கட்கு மத்தியில் உள்ள பகுதியைத்தான் ஆஞ்ஞை' என்று கூறுவர். மனிதனுக்கு உள்ள மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், விஷாத்தி, ஆஞ்ஞை, ஸ்கஸ்ரதளம் என்று கூறப்பெறும் ஆறு ஆதாரங்களில் (ஷடாதாரம்), ஆஞ்ஞை என்பது இரு புருவங்களின் நடுவே நெற்றியின் நடுப்பாகத்தின் அடிப்பகுதி என்பதாகும். இங்கேதான் ஒளிக்காட்சி அல்லது ஜோதி தரிசனம் நடைபெறும் என்று அறிஞர் கூறுவர். எனவே சூடாமணியைக் காட்டினாள் என்று கூற வேண்டிய கம்பன் நேரிடையாகக் கூறாமல் இக் குறிப்பின் பொருளும் விளங்குமாறு கவிதை செய்துள்ளான். இதனை இவன் முடிக்கும் அனுமனை எந்த அளவிற்கு இராகவன் மதித்துப் பயன்படுத்திக் கொண்டுள்ளான் என்பதையும் காண்டல் வேண்டும். ஏனைய வீரர்களைப் பிற திசைகளில்