பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299 + ஞானசம்பந்தன் ه-ة ، وتكي அனுப்பிவிட்டுத் தென் திசை செல்ல அனுமனை ஏற்பாடு செய்தான் சுக்ரீவன். இராமன் அவனைத் தனியே அழைத்துப் பிராட்டியின் அங்க அடையாளங்களைக் கூறி அனுப்பினான். எனவே, கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன்' என்று பின்னர் அனுமன் நினைத்தது சரியே என்று எண்ணத் தோன்றுகிறது. 'பிராட்டி எவ்வாறு உள்ளாளோ? எத்துணைத் துன்பங்களை ஏற்றாளோ? உயிருடன் இருக்கிறாளோ இல்லையோ? என்றெல்லாம் கவன்று உருகும் இராகவனிடம் சென்ற அனுமன், பலர் இருக்கும்பொழுது விவரமாகப் பேசுதல் தகாது எனக் கருதி, இராமனை வணங்காமல் தென்திசை நோக்கி வீழ்ந்து வணங்கினானாம். இக்குறிப் பொருளை உணர்ந்த காகுத்தன் மகிழ்ச்சி அடைந்தான். அடுத்து நெருங்கிச் சென்று கண்டனென், கற்பினுக்கு அணியைக் கண்களால் (திருவடி தொழுத படலம்-25 என்று தொடங்கினான் சொல்லின் செல்வன். ஆதலால், நான்கு சொற்களில் இராமன் கவலையை அடியோடு மாற்றிவிடுகிறான். 'கண்டனென் கண்களால் என்பதால் பிறர் கூறித் தெரிந்து கொள்ளவில்லை என்ற பொருளும், கண்களால் காணக் கூடிய முறையில் உயிருடன் இருக்கிறாள், என்ற பொருளும் பெற வைத்துவிட்டான். அடுத்து, பகைவர் கையில் சிக்கிய பாவை என்னுற்றனள் கொல்?’ என்று ஒருவேளை ஐயம் வந்திருக்குமேயானால், அதற்கும் விடை இறுக்கும் முறையில் 'கற்பினுக்கு அணியை என்று கூறிவிட்டான். தகை சான்ற சொல் காத்தாள் ஒரு பெண் தான் கொண்ட கணவன், அவன் பிறந்த இடம், தான் பிறந்த இடம் இம்மூன்று இடங்கட்கும் நற்பெயர் வாங்கித் தரல் வேண்டும். சாதாரணமாகப் பிறந்து வாழ்ந்து மடிகின்றவர்களும் இதனைச் செய்யவே