பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 - கம்பன் - புதிய பார்வை முனைவர். ஆனால் அவள் ஒரு தவறு இழைத்துவிட்டால், மேலே கூறிய மூன்றும் அடிபட்டுப் போகும். உன் பெருந்தேவி என்ற உரிமைக்கும், உன்னைப் பெற்றவன் (தசரதன்) மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன் தன் பெருந்தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் (25) என்று கூறி, விற்பெருந் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன், இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும்பொறை என்பது ஒன்றும், கற்பு எனும் பெயரது ஒன்றும், களிநடம் புரியக் கண்டேன், (திருவடி தொழுத படலம்-29) (வில் ஏந்திய வீர! இலங்கையில் தவஞ் செய்யும் ஒரு பெண்ணைப் பார்த்தேன் என்பது தவறு. நற்குடிப் பிறப்பு, எல்லையற்ற பொறுமை, கற்பு என்பவை களிநடம் புரிவதைக் கண்டேன்.) என்று கூறுகிறான். இதுவரை 5 பாடல்களிலும், அவனே பேசிக்கொண்டு செல்வது தவிர இராமன் வாய் திறந்து ஒரு சொல்கூடச் சொல்லவில்லை. ஏதாவது ஒரு வினாவையோ, ஒர் ஐயத்தையோ கேட்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. இவ்வாறு கூறுவதால், இராமன் என்ற வினாவையும் கேட்க விரும்பவில்லை என்பது பொருளன்று. சொல்லின் செல்வனாகிய அனுமன், இராமன் கேட்க வேண்டும் என்று மனத்தில் நினைக்கு முன் அந்த வினாவுக்குரிய விடையை அடுத்தடுத்துக் கூறிவிடுகிறான். ஆதலின் இராமன் செவிகட்கு மட்டுமே வேலை இருந்தது. அடுத்து அனுமன் கூறிய செய்தி,