பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 301 இராமனை இன்னும் விரகம் கொளச் செய்வதாய் அமைந்தது. - தவம் செய்த தவம் வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார், விண்தோய் காலையும் மாலை தானும் இல்லது ஒர் கனகக் கற்பச் சோலை, ஆங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையில் இருந்தாள் ஐய! தவஞ்செய்த தவமாம் தையல். (திருவடி தொழுத படலம்-3) (கடல் நடுவே உள்ள இலங்கை என்னும் அகன்ற பெரிய நகரின் ஒரு பக்கத்தே, பகலும் இரவும் அறிய முடியாத ஒரு கற்பகச் சோலை உளது. அதில், உன் தம்பி கையினால் தொடுத்த பன்ன சாலையில் இருந்தாள் யார் தெரியுமா? தவஞ்செய்த தவமே போல்வாள்.) என்று அனுமன் கூறியதால், அவள் எவ்வித இடையூறும் இன்றி உள்ளாள் என்பதையும், தம்பி சமைத்த பன்ன சாலையில் உள்ளாள் என்பதால், இராவணன் மிடுக்கு அவள்பால் சாயவில்லை என்பதும் கூறியவாறாயிற்று என்றால், ஒருத்தி எவ்வாறு இப்படி, இந்தச் சூழலில் இருக்க முடியும் என்கிறாயா? ஆம்; தவமே தவம் செய்து பெற்ற தையலாதலின் இது இயன்றது என்பதே விடை. சாலையின் சிறப்பு 'உம்பி புல்லினால் தொடுத்த சாலையில் இருந்தாள்' என்பதிலும் ஒர் உட்கருத்தைப் பெய்கிறான் கவி. மேலாகப் பார்ப்பதற்கு இலக்குவன் அமைத்த பன்னசாலையோடு நிலத்தைப் பெயர்த்து எடுத்து வந்தான் என்ற கருத்தைக்