பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 + கம்பன் - புதிய பார்வை கூறியவாறு ஆயிற்று. ஆழ்ந்து நோக்கினால் வேறு ஏதோ ஒரு கருத்தையும் உட்பெய்துள்ளான் என்பது விளங்கும். உம்பி என்றது இலக்குவனையே ஆகும். இலக்குவன் எத்தகையவன்? இந்திரியங்களை வென்று, ஊண் உறக்கம் இன்றி வாழ்ந்தவன். எனவே, புலனடக்கம் என்ற தவத்தால் அவன் பெற்றிருக்கக் கூடிய வன்மை இருக்கிறது. அவன் சமைத்த பன்னசாலை புல்லால் ஆயதுதான். என்றாலும் என்ன ? அதனை ஆக்கியவன் தவவலிமை அந்தச் சாலைக்கும் வந்துவிட்டது. புலனடக்கத்தின் பயனாக விளைந்த ஆற்றலுடன் கட்டப்பட்ட சாலையில் யார் இருக்க முடியும். இராவணன் போன்ற புலனடக்கம் இல்லாதவர்கள் அதை நெருங்க முடியாதன்றோ? எத்தனை வரபலம் இருப்பினும், புலனடக்கத்தின் வலிமையின் எதிரே அந்த வரபலம் ஒன்றுஞ் செய்ய முடியாது! இதற்கு உதாரணம் வேண்டுமெனில், இராவணன் அகத்தியனிடம் இசை வாதில் தோற்றதே சாலும். சாமகானம் ஒதுவதில் ஈடு இணையற்றவனான இராவணன், சிவபெருமானைக்கூடத் தன் சாமகானத்தால் மயக்கும் இராவணன், அகத்தியரிடம் இசைப் போட்டியில் தோற்றது எதனால்? புலனடக்கம் உடையவனுடன், அது இல்லாதவன் என்ன போரிட்டாலும் தோற்பது உறுதி. இலக்குவனாகிய அடக்கமுடையான் ஆக்கிய பன்ன சாலையில் தவஞ் செய்யலாமே தவிர, வேறு தவறான செயல்கட்கு அக்குடிசை இடந்தராது. எனவேதான், தம்பி தொடுத்த சாலையில் தவஞ்செய்த தவமாம் தையல் இருந்தாள் என்று அனுமன் கூறினான். புலனடக்கத்தின் சிறப்பை இராகவன் அறிந்தவன்ாகலின், பிராட்டி அச்சாலையில் இருக்கின்றவரை எவ்விதக் குறையும் ஏற்படாது என்பதை அறிய வேண்டி, மறைவான பொருளுடன் இவ்வார்த்தைகளைக் கூறினான் அனுமன். ஏனையோர் இவ்வார்த்தைகளைக் கேட்டால் அவர்கள்.