பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 303 ஒன்றும் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் இராகவன் மட்டும் அக்குறிப்புப் பொருளை அறிந்துகொள்வான் என்ற கருத்தில் சொல்லின் செல்வன் கூறுகிறான். மறுபடியும் நினைவுட்டுகிறான் பிராட்டி இருந்த நிலையையும், அவர்கள் சொல்லி அனுப்பிய செய்திகளையும், வரன் முறையாக விளங்கக் கூறிய அனுமன், தன் துதின் முடிவை அறிவிக்குமுன், மறுபடியும் இராமன் மனத்தில் பதிய வேண்டிய ஒரு கருத்தை வலியுறுத்துகிறான். இங்குள்ள தன்மை யெல்லாம் இயைபுளி இயையக் கேட்டாள். அங்குள்ள தன்மை எலாம் அடியேனுக்கு அறியச் சொன்னாள். "திங்கள் ஒன்று இருப்பென் இன்னே; திருவுளம் தீர்ந்த பின்னை மங்குவென் உயிரோடு என்று, உன் மலரடி சென்னி வைத்தாள் (திருவடி தொழுத படலம்-45) விரகத்தால் வாடும் இராமன், தன் துயரையே எண்ணிப் பிராட்டி கூறிய முக்கியமான செய்தியை மறந்துவிடக் கூடாது என்பதற்காக, மறுபடியும் அனுமன் அதை வலியுறுத்திக் கூறுகிறான். ஒரு திங்கள் இருப்பாள்; பின்னர் மங்குவாள் உயிரோடு, என்பதை மனத்துட் கொண்டு செயலில் இறங்க வேண்டும் என்பதே கருத் தாகும். இராமன் கொண்ட துயரத்திலிருந்து அவனை எழுப்பி, மேற்கொண்டு கடமைகளை ஆற்றச் செய்ய வேண்டும். இலக்குவன் முதல் அனைவரும் இராமனைத் தலைவனாகவும், தம்மை அடியவர் ஆகவும் ஏற்றுக் கொண்டு தம் வாழ்க்கையை வகுத்துக் கொண்டவர்கள், அவனைத் தட்டி எழுப்பிப் பணிபுரியுமாறு கூற யாருக்கும்