பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 13 இதனைச் செவியுற்ற சீதை, கோமுனியுடன் வருகொண்டல் என்றபின் தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால் ஆம்! அவனே கொல்! என்றும் ஐயம் நீங்கினாள். (மிதிலைக்காட்சி-62) என்கிறான் கம்பன் இந்தக் கற்பனையைக் கம்பன் செய்வதற்கு உதவியது முன்னர்க் கண்ட பழம்பாடல் என்பது தெளிவு. எனவே கவிச்சக்கரவர்த்தி கம்பன் இத் தமிழ் மொழியில் தோன்றிய பல்வேறு இலக்கண இலக்கியங்களையும் உண்டு, தேக்கெறிந்து அவற்றைத் தன் வசமாக்கிக் கொண்டு, தேவை ஏற்படும் பொழுது முன்னோர் மொழி பொரு ளையும், அவர் சொன்ன சொற்களையும் பொன்னேபோல் போற்றித் தன் பாடல்களில் பதித்துக்கொண்டான் என்பதும் தேற்றமாகிறது. இனி இதே நச்சினார்கினியர், தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் புறத்திணை இயல், உழிஞைத் திணையின் எட்டுத் துறைகள் பற்றி வரும் சூத்திர உரையில், மறுபடியும் இராமகாதை பற்றிய மற்றோர் பாடற் பகுதியை மேற்கோளாகக் காட்டுகிறார் தொல்புறத்-12-உரை மேற்கோள்) - பகைவர் கோட்டை மதிலை வளைத்து அதன்மேல் ஏறி, உள்ளே புக விரும்புபவர்கள் மிகுதியான கிடுகும், கேடகமும் கொண்டு செல்வர். அதுபற்றிக் கூறவந்த தோலின் பெருக்கம் என்ற துறைக்கு மேற்கோளாக இப் பழம் பாடல் காட்டப் பெறுகிறது. இருசுடர் இயங்காப் பெருமூது இலங்கை நெடுந்தோள்.இராமன் கடந்த ஞான்றை எண்குஇடை மிடைந்த பைங்கண் சேனையில் பச்சை போர்த்த பல்புறத் தண்டை