பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 + கம்பன் - புதிய பார்வை உரிமை உண்டு. சொல்லின் செல்வன் நல்ல வழி ஒன்றைக் கடைப்பிடிக்கிறான். யார் பொருட்டால் பெருவருத்தம் அடைந்து, தன்னை மறந்து இருக்கிறானோ, அந்தச் சீதை இன்னும் ஒரு மாதம்தான் உயிருடன் இருப்பேன் என்று கெடு வைத்துள்ளாள் என்பதை இறுதியாகக் கூறுவதன் மூலம், இராகவனைத் தட்டி எழுப்பி விட்டான். இலக்குவனும், சுக்ரீவனும் செய்ய முடியாத செயலை, மாருதி செய்து முடித்துவிடுகிறான். அறிவினால் ஆய்பவன் இத்தகைய அறிவுடைச் செயல்களைக் காலம் அறிந்து இடன் அறிந்து செய்வதால், இராகவன் எல்லாக் கட்டங்களிலும் மாருதியின் அறிவுரையைக் கேட்பது என்று முடிவு செய்துவிட்டான். எத்தகைய சூழ்நிலையிலும் உணர்ச்சிக்கு இடங்கொடாமல், அறிவைப் பயன்படுத்தி, உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரு நிலைகளிலும் நின்று ஆராய்ந்து, முடிவு சொல்லக்கூடிய பேராற்றல் படைத்தவன் மாருதி ஒருவனே இராமனுடன் இருப்பவர்கள் அனைவருள்ளும் நடுநிலையில் நின்று, உணர்ச்சி வசப்படாமல் விருப்பு வெறுப்புக்களைக் களைந்து, எதனையும் ஆராயும் ஆற்றல் மாருதிக்கு மட்டுமே உண்டு. முழுப் புலனடக்கம் கைவரப் பெற்றமையின் அவனுக்கு இந்த ஆற்றல் கைவந்துள்ளது. இலக்குவனும் புலனடக்கம் உடையவனேனும், அவனுடைய குருட்டுத்தனமான இராம பக்தியால், பரதனைக்கூடச் சரியான முறையில் எடைபோட முடியவில்லை. பேசுபவன் இராமனாகவே இருப்பினும், நடுநிலை தவறாமல் பேசுபவன் மாருதி ஒருவனே ஆவான். இதனைப் பூரணமாக அறிய ஒரு சந்தர்ப்பம் வருகிறது. இராமன் படைகளுடன் தென் கடற்கரையில் சென்று பாடி வீடு கொண்டுள்ளான். திடீரென்று வீடணன், துணைவர் நால்வருடன் இராமன் பாசறை வாயிலில் வந்து