பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2] அ. ச. ஞானசம்பந்தன் + 305 - நிற்கிறான். அரக்கரை வாயிலில் கண்ட குரங்கினம் ஏக அமர்க்களம் செய்கின்றது. மயிந்தன் என்பவன் வீடண னைச் சந்தித்து உரையாடுகிறான். வீடணனே நேரில் பேசுவது பொருத்தமாயிராது என்பதால், அனலன் என்பவன் இலங்கையில் நடந்தவற்றைக் கூறி, பகவலன் வழிமுதல்; பாரின் நாயகன்; புகல் அவன் கழல் அடைந்து, உய்யப் போந்தனன். (வீடணன் அடைக்கலப் படலம்-42) (சூரியன் மரபில் வரும் மன்னனாம் இராகவன் கழலில் சரணடைய வந்துள்ளான்.) என்று தான் வந்த காரணத்தை விளக்குகிறான். அனலன் முதலானவர்கள் கூறியவற்றை அப்படியே மயிந்தன் கூறுகிறான். அரண் பிறிது இல்என அருளின் வேலையைச் சரண் புகுந்தனன் எண்முன்னம் சாற்றினான். (51) மேலும் அனைத்து விவரங்களையும் மயிந்தன் கூறிய பிறகு, இராகவன் தன் உடன் இருப்பவர்களை நோக்கி "இவன் கைபுகற்பாலனோ? கழியற்பாலனோ? ஒப்புற நோக்கி தும் உணர்வினால், இயம்புவீர்" (55) என்று பேசுகிறான். இராமன் உடன் இருப்பவர்கள் உடனிருப்பவர்களுள் எவரும் கல்வி கேள்விகளில் சிறந்தவராய், இன்றியமையாத அரசியல் விஷயங்களை ஆராய்ந்து காணும் நுணுக்கமுள்ளவர்களாய் இருப்பதாகத் தெரியவில்லை. சுக்ரீவன், சாம்பன், நீலன் என்பவருடன் பிறமந்திரக் கிழவர்களும் உள்ளனர். அரசியல் நுணுக்கம் அறியாதவர்களாயினும், சிறந்த ஜனநாயக வாதியான இராகவன், அவர்களை மதித்து அவர்கள் கருத்து என்ன