பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 + கம்பன் - புதிய பார்வை என்று கேட்பது அவனுடைய பண்பாட்டையே அறிவிப்பதாம். உணர்ச்சி வசப்பட்டு முடிவு செய்யாமல், ஒப்புற நோக்கி இயம்புவீர் என்கிறான். முதலில் சுக்ரீவன் பேசத் தொடங்கி, ‘அண்ணனை விட்டு வருவது நீதியா? அரக்கரில் எவன் நல்லவன் (59) போருக்குப் பயந்து நம்முடன் வருபவன்.(6) என்றெல்லாம் பேசிவிட்டு, இறுதியாக நஞ்சினின் கொடியனை நயந்து கோடியோ? அஞ்சன வண்ண!'(28) என்று முடிக்கிறான். சாம்பன், நீலன் ஆகிய அனைவரும் சுக்ரீவன் கருத்தையே முன்மொழிந்து விட்டனர். இராமன் இப்பொழுது இக்கட்டான நிலையில் அகப்பட்டுக் கொண்டான். அவன் விருப்பத்திற்கு எதிராகவே அனைவரும் பேசிவிட்டனர். இந்த நிலையில், 'செறி பெருங் கேள்வியாய்! கருத்து என் செப்பு என, நெறிதரு மாருதி என்னும் நேர் இலா அறிவனை நோக்கினான்; அறிவின் மேலுளான். (வீடணன் அடைக்கலப் படலம்-93) (நிறைந்த கேள்வி ஞானம் உடையாய்! உன் கருத்தைக் கூறுக, என்று மாருதி என்ற அறிஞனை நோக்கிக் கேட்டான் அறிவிற்கு அப்பால் உள்ளவனாகிய இராமன்.) விளியிலேயே நுணுக்கம் இப்பாடலில் இராமன் அனுமனை விளித்த சொல் பொருளாழம் உடையதாகும். எத்துணைக் கல்வி ஞானம் உடையவனும், இப்பொழுது நடைபெறும் நிகழ்ச்சிக்குத் தன் கல்வி ஞானத்தை வைத்து விடைகூறல் இயலாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பிற மன்னர்கள் எவ்வாறு முடிவெடுத்தனர்; அம்முடிவுக்கு என்ன அடிப்படை இருந்தது; அவர்கள் எடுத்த முடிவால் என்ன பயனை