பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 + கம்பன் - புதிய பார்வை 'இங்குள அத்தனை பெரியவர்களும், நன்கு ஆய்ந்து, ஒருசேர இது தவறு எனக் கூறிவிட்டனர். இனி நான் என்ன சொல்லப் போகிறேன் ? (85), துரயவர்களாகிய அவர்கள் துணிந்து கூறிய கருத்தும் நல்லதே இருந்தாலும் ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன் (80) என்று முன்னுரை கூறித் தொடங்குகிறான். தீயவன் என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன்? (வீடணன் அடைக்கலப் படலம்-86) என்று கூறிவிட்டு, அதற்குரிய காரணங்களை வரிசைப் படுத்திக் கூறுகிறான். வஞ்சர் வாண்முகம், கண்டதுஓர் பொழுதினில் தெரியும் (87) உள்ளத்தின் உள்ளதை, உரையின் முந்துற மெல்லத் தம் முகங்களே விளம்பும். (88) இங்குக் காட்டப்பெற்ற மூன்று இடங்களும் ஒரே கருத்தை எடுத்துக் கூறுகின்றன. 'வஞ்சகர் முகங்கள் கண்டது ஒர் பொழுதினில் தெரியும். வஞ்சகர் என்று கூறிவிட்டமையின், உள்ளத்தில் உள்ளதை வெளிக்காட் டாமல் பழகியவர்கள் என்ற கருத்தும் பெறப்படுகிறது. வஞ்சகர் தம் சொல், செயல் என்பவற்றால் தம் மனக்கருத்து வெளிப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். பல சமயங்களில் முகத்தை மூடி போட்டது போல மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையவர்போல் இருக்கலாம். என்றாலும் எல்லா நேரமும் அவர்கள் இம் முகமூடி அணிந்திருக்க முடியாது. எனவே கண்டது ஓர் பொழுதினில் தெரியும் என்கிறான். பலமுறை கண்டாலும் ஏதோ ஒரு பொழுதினில் தெரிந்துவிடும் என்ற பொருளும் அமையுமாறு பேசுகிறான். அதே கருத்தை மறுபடியும்