பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 309 வலியுறுத்தும் முறையில் உள்ளத்தின் உள்ளதை என்று கூறுவதால் மனத்தை விலக்கி, உள்ளே உள்ள அக மனத்தைப் பேசுகிறான். அகமனத்தில் உள்ளவை உறக்கத்திலும், மயக்கத்திலும், உறுதியாகச் சொற்கள் மூலம் வெளிவந்துவிடும். அங்ங்னம் வருவதற்கு முன்னரே கூட, முகங்கள் விளம்பும் என்கிறான். இந்த இரண்டு சோதனைகளை அனைவரும் செய்துவிட முடியாது. மாருதியைப் போன்ற பெரிய அறிவு, அனுபவம், கூர்மையான பார்வை உடற்கூறு நூல் (சாமுத்திரிகா லட்சணம்) என்பவற்றுடன், மனவியல் அறிவும் உடையவர் தாம் இதனைச் செய்ய முடியும்! அப்பாவிகளான சுக்ரீவன் போன்றவர்கள் புறத் தோற்றத்தை மட்டும் கொண்டு முடிவு செய்பவர்கள்; அவர்களால் இது முடியாத காரியம். அனுமனைப் போலக் கல்வி, கேள்வி, அனுபவம் என்பவற்றை உடையவர் களாவது இதனைச் செய்ய முடியுமா? என்றால், இயலாது என்றே கூறிவிடலாம். ஏனெனில் அவர்கள், தான் என்ற முனைப்பும், பிறருடைய எண்ணங்கட்கு மதிப்புக் கொடுத்துக் கணிக்கும் ஆற்றலும் இல்லாதவர்கள். முனைப்பு ஒழிந்தால்தான் பிறருடைய எண்ணங்களை உள்ளவாறு அறிய முடியும். இதற்கு ஒரே வழி புலனடக்கமும், அகங்கார மமகார அழிவுமே ஆகும். உதாரணந் தேடி அதிகத் துரம் செல்ல வேண்டியதில்லை. அனுமனும், இராமனும் ஒருவரை ஒருவர் கண்டு சில சொற்கள் பேசிக்கொண்ட உடனேயே ஒருவரை ஒருவர் எடை போட முடிந்ததல்லவா? இதனால்தான், முக பாவத்தைக் கொண்டு பண்பாட்டைக் கணிக்கும் முறைக்கு அனுமன் அதிக மதிப்புத் தருகிறான். பேச்சும், செயலும், நடை உடை பாவனைகளும் ஒருவருடைய எண்ணங்கட்குக் கட்டுப்பட்டவை ஆகலின், உள்ளே இருப்பதை வெளிக்காட்டாமல் மறைக்கவும் முடியும்.