பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 - கம்பன் - புதிய பார்வை ஆனால் முகத்தில் அகமனம் பிரதிபலிப்பதை யாரும் மறைக்க முடியாது. இதனைத்தான் வள்ளுவன், அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். (திருக்குறள்-70) என்று கூறுகிறான். அனுமனை நம்பக் காரணம் அனுமனுடைய இந்த ஆற்றலை இராகவன் நன்கு அறிந்தவன் ஆகலானும், அவன் இலங்கையில் முன்னரே வீடணனைச் சந்தித்தவன் ஆதலானும், அவனுடைய தீர்ப்பில் அதிக நம்பிக்கை வைத்துள்ளான் இராகவன். அந்த நம்பிக்கை பழுதடையாமல், இரண்டு காரணங் களைக் காட்டி, இவன் தீயன் அல்லன் என்று முடிவு கூறினான் அனுமன். ஒருவன் நல்லவனாகக்கூட இருக்கலாம்; ஆனால் இப்பொழுது இங்கே ஏன் வந்தான் என்பதற்கு, நல்லவன், தீயவன் என்பது விடை ஆகாது. சுக்ரீவன் முதலியோர், மாரீசனைப் போன்றவன் இவன் உளவு அறிந்து செல்லவே வந்துள்ளான்' என்றுதானே குற்றஞ் சாட்டினர். அந்தக் குற்றத்திற்கு மறுப்புரை வழங்குகிறான் அனுமன். ஆனால் அவர்கட்கு மறுப்புக் கூறும் அதிகாரம் அவனிடம் இல்லை. எனவே, அவர்கள் வாதத்தைக் கண்டு கொள்ளாதவன் போல் இதோ பேசுகிறான்: - வாலி விண்பெற, அரசு இளையவன் பெற, கோலிய வரிசிலை வலியும், கொற்றமும் சீலமும் உணர்ந்து, நிற்சேர்ந்து, தெள்ளிதின் மேல் அரசு எய்துவான், விரும்பி மேவினான். (வீடணன் அடைக்கலப் படலம்-19) வாலி விண் பெற்றதையும், அவனுடைய அரசைச் சுக்ரீவனுக்கு ஈந்ததையும் கண்டு, உன் வில் ஆற்றலையும்,