பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 311 வெற்றிச் செய்கையையும், பண்பாட்டையும் உணர்ந்து, நின்னைச் சேர்ந்து மேலே இலங்கை அரசைப் பெறவே, இவண் வந்துள்ளான் என்று விரிவாகக் காரண காரிய முறையில் ஆராய்ந்து, வந்தவனுடைய நோக்கம் என்ன என்பதைக் கூறி முடித்தான். வந்தவனுடைய நோக்கம் (Motive) மிக முக்கியம். அதில் தவறு உள்ளது என்பது தானே பிறர் வாதம். அதனை மறுத்துத் தன்னல அடிப்படையில்தான் வந்துள்ளான் எனக் கூறுகிறான். ஆதலால் இவனால் தீமை விளையாது என்பது அவன் முடிவு. ஒருவன் நோக்கத்தை அறிய வேண்டும் எந்த ஒருவனுடைய செயலையும் ஆராயும்பொழுது, நோக்கம் என்ற ஒன்றைத்தான் இன்றும் முக்கியமாக ஆய்கிறார்கள். அது தெளிவாக விளங்கிவிட்டால், எத்தகையவனையும் வைத்து ஆளுதல் எளிதாகும். இன்ன எண்ணத்துடன்தான் வந்தான் என்பதை ஒப்புக்கொண் டால், இத்தனை காலம் இல்லாமல், இப்பொழுது ஏன் வந்தான் என்ற வினா அடுத்துத் தோன்றும் அல்லவா? அதற்கு விடையை, அடுத்த பாடல்களில், அரக்கர்தம் அரசு சீரியோர் நெறியில் செல்லவில்லை; நீண்டநாள் நிலைபெறாது என்று இவன் முடிபு செய்ததே, இவன் உன்னிடம் வருவதற்குக் காரணமாகும். ஏன் இராமனிடம் வந்தான் எனில், அவன் ஒருவன்தான் தனக்கு ச் சொந்தமான ஆட்சியைத் தானே விரும்பி இளவலுக்கு ஈந்தவன் (90) என்றும் கூறுகிறான். காலம் அல்லாத காலத்தில் வந்தான் என்று கூறுகிறவர்கட்கு அடுத்த பாடலில் விடை வருகிறது. "வாலி ஒழிந்தான் என்பதறிந்து, அடுத்து இராவண னுக்கு இறுதி உறுதி என்பதால், தன் உறவை முறித்துக் கொண்டு இவன் வந்தான் (9).