பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 + கம்பன் - புதிய பார்வை என்ற சமாதானம் அறிவுக்குப் பொருத்தமானதே. இனிப் பகைவனான இவனைச் சேர்த்துக் கொண்டால் தன் உயிருக்கு ஊறு விளையலாம் என்ற வாதத்திற்கு அனுமன் விடை அழகானது. உயர்ந்தவர்கள், இத்தகைய சூழ்நிலையில் உள்ளவர்கள் வந்தால் அவர்களால் நம் வலி தொலையுமோ என அஞ்சுதல் சரியே. ஆனால் எளியவர்கள், தஞ்சம் என்று வந்தவர்கள் திறத்து இவ்வாறு எண்ணுதல் சரியன்று என்பது, அவன் விடை (93). தருக்கம் வல்லான் மந்திரத்திலுள்ளவர்கள் கருத்தை மறுத்து, அதற்குரிய விடையைக் கூறி, அவர்கள் கருத்துச் சரியன்று என்பதை நிலைநாட்ட முயன்றானே அல்லாமல், தன் கருத்தை இதுவரை கூறவில்லை. தருக்க சாத்திரம் நன்கு பயின்ற வர்கட்கு பரபக்கம், சுபக்கம் என்ற இரண்டு நன்கு தெரியும். பரபக்கம் என்பது பிறர் கொள்கையை மறுத்தல் எனப் பொருள்படும். சுபக்கம் என்பது தன் கொள்கையை நிலைநாட்டல் என்று பொருள்படும். தருக்கம் வல்லவ னாகிய அனுமன், பிறர் கொள்கையை இதுவரை களைந்து இனித் தன் கருத்தைப் பேசத் தொடங்குகிறான். "என்னை உடனே பற்றிக் கொல்ல வேண்டும் என்று இராவணன் ஆணை இட்டபொழுது, தூதர், மாதர், அறிவு குறைந்தவர் என்பவர்களைக் கொல்லுதல் தூய்மையன்று' என்றான். (95). "இவன் மாளிகையை இரவில் சுற்றிவந்த பொழுது நன்னிமித்தங்கள் பல தோன்றின (95).

  • நறவமும் ஊனும், இவன் வீட்டில் இல்லை; தரும தானமும், நீதியும் பிறவுமே நிறைந்திருந்தன (9).