பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 313 தன் தமையன் வரபலம் முதலியவை உன் வில்லுக்கு ஆற்றாது அழியும் எனக் கருதி வந்துள்ளான். உன்னிடம் வந்துள்ள இவன் தவஞ் செய்தவனே ஆவான்." (99) இவற்றை அடுத்து வலுவான வாதம் ஒன்றை முன் வைக்கின்றான். இதுவரை அவன் கூறியவற்றை மறுத் துரைப்பவர் அக்கூட்டத்தில் யாரேனும் இருந்திருப்பின், கூறப்போகும் இந்த வாதத்தை மறுக்க முடியாமல் தலை சாய்த்தே தீரல் வேண்டும். தேவர்க்கும் தானவர்க்கும், திசைமுகனே முதலாய தேவ தேவர் மூவர்க்கும் முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய்; ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதியாயின், கூவத்தின் சிறுபுனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ? - கொற்ற வேந்தே! (வீடணன் அடைக்கப் படலம்-100) (அரசே! தேவர்கள், தானவர்கள், மும்மூர்த்திகள் ஆகிய அனைவரும் செய்யமுடியாத காரியத்தை முடிக்கவே இங்கு வந்துள்ளாய்! உன்னிடம் அபயம் என்று வந்த வனைச் சந்தேகித்து விட்டுவிடுவாய் எனில், ஒரு கிணற்றிலுள்ள நீரைக் கடல் சந்தேகப்பட்டதுபோல ஆகாதோதி இந்தப் பாடலின் நுணுக்கத்தைக் காண்டல் வேண்டும். பகைவனிடமிருந்து வந்த இவன் உளவு அறிய வந்துள்ளான் எனவே, நமக்குத் தீங்கு விளைவிப்பான் என்று கருதினால் அதற்கும் ஒரு சமத்துவம் வேண்டும். இருவரும் ஒத்த வன்மையுடையவராக இருப்பின், இவ்வாறு கூறுவது சரியே, ஆனால் உன் பெருமை