பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கம்பன் - புதிய பார்வை எச்சார் மருங்கினும் எயில்புறத்து இறுத்தலின் கடல்சூழ் அரணம் போன்றது உடல்சின வேந்தன் முற்றியே ஊரே” (ஆசிரியமாலை-புறத்திரட்டு 852) (சூரிய சந்திரர் அதன்மேல் செல்ல முடியாத பழைய இலங்கா நகரை, வலிய தோளையுடைய இராமன் முற்றுகை இட்டபொழுது, கரடிகள் (எண்கு) நிறைந்த பலவாகிய படைவகுப்பு (தண்டை) கேடயத்துடன் (பச்சை). மதிலைச் சுற்றி எல்லாப் பக்கமும் நிறைந்து நின்றமையின், கடலால் சூழப்பெற்ற கோட்டை போலிருந்தது, சினத்துடன் இராமனால் முற்றுகை இடப்பட்ட அவ்வூர்.) இப்பாடலும் முன்னர்க் காட்டப்பெற்ற பழம்பாடலும் ஒரே நூலின் இரு பகுதிகள் என்பதை அறிந்துகொள்ள அதிக நேரம் ஆகாது. இப்பாடலின் நடை, சொல் ஆட்சி, ஒசை நயம் என்பவற்றைக் காணும்பொழுது சங்க காலத்தை அடுத்த காலத்தில் ஏறத்தாழச் சிலப்பதிகாரம் தோன்றிய காலத்தில், இத்தகைய பாடல் முறையில், இராமகாதை இந்நாட்டில் வழங்கியது என்று நினைய வேண்டியுளது. கடந்த ஞான்றை-கடந்தபொழுது, பச்சை-கேடயம்: தண்டை-படைவகுப்பு, எயில்புறத் திறுத்தல்-கோட்டையை வளைத்து நிற்றல், முதலிய சொல்லாட்சிகள் சிலப்பதிகார காலத்துக்கும் முற்பட்ட வையோ என்றுகூட ஒருவாறு நினைய வேண்டியுளது. உதாரணமாகக் காட்டப்பெற்ற இரண்டு பகுதிகளும் ஒரே நூலின் பகுதிகள் என்பதையும் ஊகிக்க முடிகிறது என்றால் இராமகாதை, வெண்பாவும், ஆசிரியமும் பெருகி வளர்ந்திருந்த காலத்தில் ஒரு முழு நூலாகவே இத் தமிழ் நாட்டில் வழங்கி இருக்க வேண்டும். அத்தகைய நூல் இன்று கிடைக்காமற் போனது பெரிதும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இந்த நூலை இயற்றியவர் வான்மீகத்தைப்