பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 + கம்பன் - புதிய பார்வை அளவிடற்கரியது. மூவர்க்கும் முடியாத ஒன்றைச் செய்ய வருபவனாகிய நீ, இவனை ஒத்த ஒருவனால் தீமை விளையும் என்று அஞ்சினால், அது கிணற்று நீரைக் கண்டு, கடல்நீர் அஞ்சுவது போலாம் என்கிறான். அடுத்து, பகைப்புலத்தோர் துணை அல்லர் என்று இவனைப் பற்றாயேல், அறிஞர் பார்க்கின் - நகைப் புலத்த தாம் அன்றே............. | (வீடணன் அடைக்கலப் படலம்-10) என்று கூறிவிட்டு, இறுதியாகத் தன் கருத்தைத் தொகுத்துக் கூறுகிறான். அவ்வாறு கூறும்பொழுதுக.ட அவனுடைய அடக்கம் முன்னின்று உதவுகிறது. இதோ அனுமன் பேசுகிறான்: ஆதலால், இவன் வரவு நல்வரவே என உணர்ந்தேன், அடியேன்; உன்தன் வேதநூல் எனத் தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன், என்று விட்டான். காதல் நான்முகனாலும் கணிப்பு அறிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று ஒதினான், ஒதநீர் கடந்து, பகை கடந்து உலகை உய்யக் கொண்டான். - - (102) (மேலே கூறிய காரணங்களால், இவன் வரவு நல்வரவே என, அடியேன் உணர்ந்தேன். வேதம் எனத் தகைய உன் திருவுளத்தின் குறிப்பை அறியாமல் பேசிவிட்டேன் என்று கூறினான். யார் என்றால் நான் முகனும் கணக்கிட முடியாத கலைகளை எல்லாம் கதிவரன் கூடவே, அவன் முன்னர்ச் சென்றுகொண்டே ஒதினவனும், கடலையும், பகையையும் கடந்து உலகத்தின் இடர் தீர்த்தவனுமாகிய அனுமன்.)